வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளி செடியில் அதிகமாக தக்காளி காய்க்கவில்லையா..! அப்போ தக்காளி கொத்து கொத்தாக காய்க்க இதை மட்டும் செய்யுங்கள்..!

Updated On: October 13, 2023 1:17 PM
Follow Us:
Tomato Plant Growing Fast in Tamil
---Advertisement---
Advertisement

Tomato Plant Growing Fast in Tamil

நாம் அனைவருமே வீடுகளில் நமக்கு தேவையான காய்கறி செடிகள், பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருவோம். ஆனால் இதனுடைய விளைச்சல் என்பது குறைவாகவே இருக்கும். ஏனென்றால் அதற்கு போதிய அளவிலான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். ஒவ்வொரு தாவரத்திற்கு ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்போதுதான் அதற்கு ஏற்ற ஊட்டச்சத்தினை எடுத்துக்கொண்டு செழிப்பாக வளர தொடங்கும். எனவே அப்படி நீங்கள் உங்கள் வீடுகளில் தக்காளி செடி வைத்து அது காய்க்காமல் இருந்தால் அதனை காய்க்க வைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How To Get More Fruit on Tomato Plants in Tamil:

How To Get More Fruit on Tomato Plants in tamil

தக்காளி செடியை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். அதாவது 8 மணிநேரம் வரை தக்காளி செடி சூரிய ஒளியில் இருப்பது அவசியம்.

தக்காளி செடி நன்கு செழித்து வளர அதற்கு தொழு உரம் இட வேண்டும். மேலும், நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிரம்பிய உரங்களை இட வேண்டும்.

தக்காளி செடிகள் எட்டு அடி நீளம் வரை வளரக்கூடிய தன்மை கொண்டது. எனவே ஒவ்வொரு தக்காளி செடிக்கு அருகிலும் பெரிய நீண்ட அளவிலான ஒரு குச்சியை ஊன்றி வைக்க வேண்டும். அதன் பிறகு, தக்காளி செடி வளர வளர அந்த குச்சியுடன் சேர்த்து கட்டி வைக்க வேண்டும்.

மிளகாய் செடியில் பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த பொருளை மட்டும் உரமாக கொடுங்கள்..!

தக்காளி செடிக்கு உரமிடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தக்காளி செடிக்கு தழைக்கூளம் இடுவது அவசியம். ஏனென்றால் தழைக்கூளம் தாவரத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

தக்காளி செடியில் கீழ் உள்ள இலைகளை வளர வளர நீக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தக்காளியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தக்காளி இலைகளில் பூச்சி தாக்குதல் ஏதும் இருந்தால் அதனை உடனே கண்டறிந்து நீக்கிவிட வேண்டும். 

மேற்கூறிய முறைகளை எல்லாம் உங்கள் தக்காளி செடிக்கு செய்வதன் மூலம் தக்காளி செடியில் இருந்து அதிக தக்காளியை பெறலாம்.

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

வைத்த 15 நாட்களிலேயே ஜாதி மல்லி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now