எலுமிச்சை மரத்தில் பூக்கின்ற பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் செய்யுங்கள்..!

Advertisement

How To Get More Lemons on Your Tree in Tamil

எலுமிச்சை பழம் மனித உடலுக்கு தேவையான வைட்டமின்களில் ஒன்றான வைட்டமின் சி-யை அதிகம் கொண்டுள்ளது. அதுமட்மில்லாமல் எலுமிச்சை பழம் உடல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி, சரும ஆரோக்கியம் போன்ற எண்ணற்ற நன்மைகளை தருகிறது. எனவே எலுமிச்சை பழம் நமக்கு பல வகைகளில் பயன்படுவதால் இதனை நாம் வீட்டில் வளர்த்து வருவோம். ஆனால் மரம் வைத்து 3 வருடங்கள் வரையும் பூ வைக்காமல் அப்படியே இருக்கும். அப்படி இருக்கும் மரங்களுக்கு நாம் சில ஊட்டச்சத்துக்களை இட வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get More Lemon From Lemon Tree in Tamil:

எலுமிச்சை மரம் பல வருடங்கள் காய்க்காமல் இருந்தால் அதற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் நிரம்பிய உரங்களை இட வேண்டும். இந்த உரங்களை இடுவதன் மூலம்  எலுமிச்சை மரத்தில் அதிக காய்கள் காய்க்க தொடங்கும்.

முக்கியமாக மக்கிய மாட்டு எருது மற்றும் மண்புழு உரங்களை இட வேண்டும்.

lemon tree fertilizer homemade in tamil

மரம் பூ வைக்காமல் இருந்தால் அதற்கு தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். அதாவது, 1 டம்ளர் தேங்காய் பால் மற்றும் புளித்த மோர் கரைசலை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு 9 டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

புதினா செடி புதர் போல வளர இதை மட்டும் உரமாக கொடுங்கள்..!

இதனை எலுமிச்சை செடியின் மேல் பகுதியில் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனே எலுமிச்சை மரம் பூ வைத்து காய்க்க தொடங்கும்.

மேலும், வாழைப்பழ தோல், முட்டை ஓடு, மட்கிய இலைதழைகள் போன்றவற்றையம் உரமாக இட வேண்டும்.

fertilizer for lemon tree in india in tamil

எலுமிச்சை மரத்திற்கு நல்ல சூரிய ஒளி தேவை.அதற்கேற்றவாறு அமைக்க வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது, எலுமிச்சை மரத்தை சுற்றி பாத்தி கட்டி அதற்கு தண்ணீர் இட வேண்டும். 

எலுமிச்சை மரத்தில் உண்டாகும் பூச்சி தாக்குதலை தடுக்க வேம்பு மற்றும் பூண்டு கலவையை உரமாக இட வேண்டும்.

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

ஜேட் செடி (லக்கி பிளாண்ட்) வீட்டில் வளர்ப்பது எப்படி.?

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement