Home Remedy For Mealybugs on Hibiscus
செம்பருத்தி செடி கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இத்தாவரத்தின் பூ மருத்துவ குணம் நிறைந்தது. மேலும், செம்பருத்தி பூ மலேசியாவின் தேசிய மலராகவும் கருதப்படுகிறது. இச்செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகின் காரணமாக பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இச்செடி அழகு தாவரமாக ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படுகிறது. ஆனால், இச்செடியினை மாவு பூச்சி நோய் எளிதில் தாக்குவதால் இதனுடைய வளர்ச்சி குறைந்து அழிந்துவிடுகிறது. எனவே, இப்பதிவில் செம்பருத்தி செடியில் வரும் மாவு பூச்சியினை முற்றிலுமாக அளித்து செடியை ஆரோக்கியமாக வளர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Rid of Mealybugs on Hibiscus Plant in Tamil:
மைதா மாவு கரைசல்:
முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் 100 கிராம் மைதா மாவினை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் 1 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளுங்கள். அடுத்து இதனை கட்டியில்லாமல், வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த தண்ணீரை, நன்கு வெயில் அடிக்கும் நேரத்தில் செம்பருத்தி செடியின் மீது வேகமாக தெளித்து விடுங்கள். முக்கிமாக மாவு பூச்சி உள்ள இடத்தில் அதிகமாக தெளித்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம், மைதா மாவு மாவு பூச்சியின் மேல் படிந்து பசைபோல் ஒட்டிக்கொள்ளும். இதனால் செடியில் உள்ள அனைத்து மாவு பூச்சியும் கீழே விழுந்து இறந்து விடும்.
மல்லிகை பூச்செடியில் பூச்சிகள் வராமல் இருக்க மாதத்தில் 1 நாள் இதை ட்ரை பண்ணுங்க
பழைய சாதம் கரைசல்:
மாவு பூச்சியை அளிப்பதற்கு மற்றொரு சிறந்த வழி பழைய சாதம் கரைசலை தெளித்து விடுதல் ஆகும்.
அதாவது, பழைய சோற்றினை ஒரு மூடிய டப்பாவில் சேர்த்து ஒரு வாரம் வரை நொதிக்க விடுங்கள். அதன் பிறகு, இதனை கூலாக கரைத்து நன்கு வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இந்நிலையில் இதனுடன் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து, செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சியின் மேல் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மாவு பூச்சி எளிதில் அழிந்து விடும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |