கற்றாழை செடி வேகமாகவும் அதிக சதை வைத்தும் வளர இந்த உரத்தை கொடுங்கள்..!

Advertisement

How To Grow Aloe Vera Faster and Bigger in Tamil 

கற்றாழையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். கற்றாழை நம் சரும பிரச்சனை, முடி பிரச்சனை, உடல் சூடு போன்ற பலவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் கற்றாழை செடியை வீட்டில் வைப்பதன் மூலம் வீடு செழிப்புடன் இருக்கும் எனவும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே, இதனின் அருமை அறிந்தே நாம் அனைவருமே வீட்டில் கற்றாழை செடி வளர்த்து வருவோம். ஆனால் ஒரு சில வீடுகளில் கற்றாழை செடி வளராமல் இருக்கும் அல்லது காய்ந்துவிடும். இதனை தடுக்க நாமும் சில வழிகளை பின்பற்றி இருப்போம். அந்த வகையில் இப்பதிவில் கற்றாழை செடி வேகமாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What is The Best Fertilizer For Aloe Vera in Tamil:

What is The Best Fertilizer For Aloe Vera in Tamil

முதலில் கற்றாழை செடியை ஊன்றும்போது அதற்கு அடியுரமாக தொழுஉரம் இட வேண்டும். கற்றாழை செடி வளர தொடங்கும் நிலையில் அதற்கு உலர்ந்த வாழைப்பழத்தோலை உரமாக இட வேண்டும்.

மேலும், அதன் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த முட்டை ஓடுகளை சிறிது சிறிதாக உடைத்து உரமாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் உலர்ந்த வாழைப்பழதோல் உரம் மற்றும் முட்டை ஓடுகளை கற்றாழை செடிக்கு உரமாக கொடுப்பதன் மூலம் அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தழைச்சத்து உரம்:

கற்றாழை செடிக்கு உரம் தழைச்சத்து உரங்கள் இடுவதன் மூலம் கற்றாழையில் வளர்ச்சியினை அதிகப்படுத்தலாம். எனவே தழைச்சத்து நிறைந்த செயற்கை உரங்கள் அல்லது இயற்கை உரங்களை கற்றாழை செடிக்கு கொடுக்க மறக்காதீர்கள்.

திரவ உரம்:

திரவ உரம் என்பது,  விலங்குகளின் கழிவுகள் மற்றும் கரிமப் பொருட்களின் கலவை ஆகும். எனவே நீங்கள் மாட்டு சாணத்தை தண்ணீரில் கலந்து கற்றாழை செடிக்கு உரமாக கொடுக்கலாம்.

மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

கற்றாழை செடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்வது தெரியுமா 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement