கற்றாழை செடி வளர்ப்பது எப்படி..?
நம்மில் பலருடைய வீட்டில் இந்த செடிகளை வளர்த்து வருவீர்கள். அதேபோல் சிலருக்கு வளர்க்க ஆசையாக இருக்கும். ஆனால் என் வீட்டில் வளர்க்க இடம் இல்லை என்று கவலையாக இருப்பார்கள். அதாவது இதனை வளர்க்க பெரிய இடம் தேவையில்லை..! உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனி இடங்களில் கொஞ்சம் இடம் இருந்தால் போதுமானது. இந்த கற்றாழை செடியை பெரிதாக வளர்க்க முடியும். சரி வாங்க இப்போது கற்றாழை செடியை எப்படி வளர்ப்பது என்று தெரித்துக் கொள்ளலாம் வாங்க..!
கற்றாழை செடி வளர்ப்பது எப்படி..?
முதலில் உங்களுக்கு கற்றாழை வேருடன் கிடைக்கவில்லை என்று கவலை கொள்ளவேண்டாம். உங்களுக்கு ஒரு கற்றாழையின் பாதி இதழ் கிடைத்தாலும் போதும். அதனை பெரிய பெரிய செடியாக மாற்ற முடியும். சரி வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு கற்றாழையை எடுத்துக் கொள்ளவும். அதனை தேன் இருக்கும் அல்லவா அதில் அடி பக்கத்தை நனைத்து கொள்ளவும். அதாவது ஒரு கிணத்தில் கொஞ்சம் தேன் ஊற்றிக் கொள்ளவும். அதில் கற்றாழையின் ஜெல் இருக்கும் பக்கத்தை வைக்கவும்.
அதன் பின் ஒரு பூ தொட்டியை எடுத்துக் கொள்ளவும். அதில் மணல் அதாவது அதில் களிமண் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து தேனில் வைத்துள்ள கற்றாழையை அதில் புதைத்து வைக்கவும். கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!
அடுத்து ஒரு 7 நாட்களுக்கு பிறகு எடுத்து பார்த்தால் அதில் ஒரு சின்னதாக புதிதாக ஒரு காற்றாழை வரும். அதனை மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே தொட்டியில் நறுக்கிய கற்றாழையை புதைத்து மேல் பக்கம் தெரிவது போல் வைக்கவும். அடுத்து 15 நாட்களுக்கும் உங்களுக்கு புதிதாக இதழ் செடிகள் வளர ஆரம்பிக்கும். அதனை அப்படியே அதிகமாக தண்ணீர் ஊற்றாமல் ஓரளவு தண்ணீர் ஊற்றி பார்த்துக்கொண்டால் போதுமானது. அடுத்து 30 நாட்களுக்குள் கற்றாழை செடி வளர ஆரம்பிக்கும். சரி இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க உங்கள் வீட்டில் கற்றாழை செடியை சுலபமாக வளர்க்க முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |