பெருங்காயம் ஒன்று போதும் நெல்லிக்காய் கொத்து கொத்தாய் காய்ப்பதற்கு..

Advertisement

நெல்லிக்காய் மரம் வேகமாக வளர

இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கு ஓடி ஓடி உழைக்கின்றனர். இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை அப்படியே சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதில்லை. நின்று கொண்டே சாப்பிடுகிறோம். போகின்ற வழியில் இருக்கும் கடைகளில் சாப்டிருக்கிறோம். இப்படி சாப்பிட்டால் நோய் தான் ஏற்படும். நீங்கள் கடைகளில் வாங்கி சப்டிடா முடியவில்லை என்றால் வீட்டிலேயே வளர்க்க கூடிய காய்கறி, பழங்கள், கீரைகள் போன்றவற்றை வளர்க்கலாம். அதில் ஒன்றான நெல்லிக்காய் மரம் பலரது வீட்டில் இருக்கும். சில பேர் வீதி கொத்து கொத்தாக காய்கள் காய்க்கும். சிலரது வீட்டில் நெல்லிக்காய் மரத்தை வைத்த மாதிரியே இருக்கும். மரம் தான் வளரும் அதிலிருந்து ஒரு காய். பூ எதுமே வைக்காது. அதனால் தான் இந்த பதிவில் நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெறிக்குது கொள்வோம் வாங்க..

நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்க்க டிப்ஸ்:

தண்ணீர் அதிகமாக  இருக்க வேண்டும்:

நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்க்க டிப்ஸ்

நீங்கள் நெல்லிக்காய் செடி வைத்தவுடன் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். எப்பொழுதுமே மரத்தை சுற்றி எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் தான் காய்கள்அதிகமாக காய்க்கும்.

உரம்:

நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்க்க டிப்ஸ்

நீங்கள் நெல்லிக்காய் மரத்திற்கு முடிந்தவரை இயற்கையான உரத்தையே பயன்படுத்த வேண்டும்.  ஆட்டு சாணம், மாட்டு சாணம், காய்கறி கழிவு, அரிசி தண்ணீர் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..  தாறுமாறாக பூ வைக்கும்.

கிளைகளை நறுக்க வேண்டும்:

நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்க்க டிப்ஸ்

நெல்லிக்காய் மரத்தில் பக்க கிளைகள் நிறைய வந்தவுடன் கிளைகளை நறுக்கி விட வேண்டும். ஏனென்றால் பக்க கிளைகள் அதிகமானால் காற்று அடிக்கும் போது மரம் சாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிளைகளை நறுக்கும் போது தான் காய்கள் அதிகமாக காய்க்கும்.

நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் இன்னொரு நெல்லிக்காய் மரத்தை வைக்க வேண்டும். ஏனென்றால் இனப்பெருக்கம் நடந்தால் தான் காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பிக்கும்.

பெருங்காயம்:

ஒரு கிண்ணத்தில் பெருங்காயத்தை தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். இதனை மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து மரத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் நெல்லிக்காய் அதிகமாக காய்ப்பதற்கு வழிவகுக்கிறது.

வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement