உங்களுக்கு பிடித்த மணி பிளாண்டை எவ்வாறு கவனமாக வளர்ப்பது என்று தெரியுமா…..

how to grow and take care of your money plant

மணி பிளாண்ட்

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வளர்க்கப்படுகின்ற செடி மணி பிளாண்ட் ஆகும். இதனை பண செடி அல்லது அதிர்ஷ்ட செடி என்றும் குறிப்பிடலாம். இதை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு மற்றும் அதிர்ஷ்டம் கை கூடி வருதல் போன்ற நன்மைகள் நடக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் மிகவும் பொதுவான தாவரங்களில் மணி பிளாண்ட் ஒன்றாகும், ஏனெனில் இது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. அதில் இருக்க கூடிய இதய வடிவிலான இலைகள் மிக விரைவாக வளரக்கூடியவை.வீட்டிற்குள் மற்றும் வீட்டிற்கு வெளியே என இரு வகைகளிலும் இதனை வளர்க்கலாம்.

சின்னஞ்சிறு தண்டு ஒன்றை ஊன்றி வைத்தால் கூட, அதிலிருந்து பெரிய அளவுக்கு இது படர்ந்து வளரக்கூடியது. நீண்ட நாட்களுக்கு தண்ணீர் ஊற்றாவிட்டாலும் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செழிப்பாக வளரக்கூடிய செடியாக இது உள்ளது. இந்த செடியை மென்மேலும் பசுமையாக, அழகாக வளர்த்தெடுக்க உங்களுக்கான சில குறிப்புகள் இதோ…

மணி பிளான்டின் பசுமையான வளர்ச்சிக்கு சில டிப்ஸ்:

how to grow and take care of your money plant

தொட்டியின் அளவு:

பானையின் அளவு எப்போதும் பெரியதாக இருப்பது சிறந்தது. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கனமான அல்லது பெரிய பானைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது, ஏனெனில் தாவரத்தின் அதித வளர்ச்சியின் போது மறு நடவு செய்யும் சூழல் ஏற்படும். அதனால் சிறிய தொட்டிகள் தாவரத்தின் வளர்ச்சியை குறைக்கும்.

தண்ணீர்:

வாரத்திற்கு ஒரு முறை தாவரங்களுக்கு தண்ணீர் கொடுப்பது சிறந்தது. இந்த தாவரம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும். அதனால் இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை.

மண்:

மண்ணின் தரம் சரியாக இல்லை என்றாலும் கூட இந்த செடி காய்ந்து சருகாக கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்ற மண் எடுத்து பயன்படுத்த வேண்டும். இதற்கு, வெர்மிகுலைட்டுடன் கோகோபீட்டை கலப்பது ஒரு நல்ல வழி. இது மண்ணின் தன்மையை பாதுகாக்கும்.

இயற்கை உரம் :

மணி பிளாண்ட் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இயற்கையான உரம் லேசான அளவில் சேர்த்து வரலாம். மண்ணில் போதுமான சத்து இல்லை என்றால் இந்த செடி செழிப்பாக வளராது மற்றும் சோர்ந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

உங்கள் வயலை புகையான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க….இதை ட்ரை பண்ணுக…

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்