வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூக்காத அரளி பூ செடியிலும் கிலோ கணக்கில் பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Updated On: November 16, 2023 7:59 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Arali Sedi Valarpathu Eppadi

பெரும்பாலான வீடுகளில் அரளி பூ செடி வளர்த்து வருவார்கள். அரளி பூவை பெரும்பாலும் மாலையாக கடவுள்களுக்கு சார்த்துவார்கள். எனவே இச்செடியை பெரும்பாலான வீடுகளில் வளர்த்து வந்தாலும் ஒரு சில செடிகள் பூக்கள் வைக்காமலே அப்படியே இருக்கும். இல்லையென்றால் நன்கு வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் பல வருடங்கள் ஆன பிறகு, அதில் மொட்டுகள் வைக்காமலே இருக்கும். இவ்வாறு பூக்கள் போகாமல் இருந்தால் நாம் சில பராமரிப்பு முறைகளையும் செடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் கொடுக்க வேண்டும். எனவே அவற்றை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரளி பூ அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்.?

 arali chedi valarpu in tamil

அரளி செடியை வாங்கி வந்ததும் அதன் நுனிப்பகுதியில் உள்ள குருத்தை வெட்டி விட்டு அதன் பிறகு பதியம் போட வேண்டும்.

அரளி பூ பெரிதாக வளரும் வரை 2 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு, வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. அதாவது, அரளி செடியின் மண்கலவை நன்கு உலர்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் தான் அரளி செடி நன்கு பூக்க தொடங்கும்.

முக்கியமாக, அரளி செடியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும்.

அரளி செடி ஓரளவிற்கு வளர்ந்த பிறகு, 4 அடி உயரத்திற்கு பிறகு உள்ள கிளையை வெட்டி விட வேண்டும்.

அரளி செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம், தொழுஉரம் மற்றும் மட்கிய இலை தழைகள் போன்றவற்றை உரமாக கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை உரம் கொடுக்கும்போதும், மண்ணை நன்கு கிளறிவிட்டு அதன் பிறகு உரத்தினை கொடுக்க வேண்டும்.

மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க இந்த ஒரு டிப்ஸ் மட்டும் போதும்..

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now