கத்தரிக்காய் செடியில் பூக்கின்ற பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த உரத்தை மட்டும் கொடுங்கள்..!

Advertisement

How To Grow Brinjal Faster in Tamil

கத்தரிக்காயில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. கத்தரிக்காயில் மட்டுமில்ல அணைத்து காய்கறிகளிலும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் தற்போது காய்கறி நன்றாக வளர வேண்டுமென்பதற்காக பல வகையான செயற்கை மருந்துகள் சேர்க்கப்படுகிறது. இந்த மருந்துகள் சேர்க்கப்பட்ட காய்கறிகளை தான் நாம் அன்றாடம் சாப்பிட்டு வருகிறோம். இதனால் காலப்போக்கில் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி நமக்கு தேவைப்படும் காய்கறிகளை நாம் அனைவருமே வீட்டில் இயற்கையான முறையில் வளர்க்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டே பலபேர் வீடுகளில் கத்தரிக்காய் செடியை வளர்க்கிறார்கள்.  இருந்தாலும் கத்தரிக்காய் செடியில் வைத்த பூக்கள் அனைத்தும் காய்ந்து உதிர்ந்து விடும். எனவே இதனை தடுத்து அதிகமாக கத்தரிக்காயை பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும்.?

கத்தரிக்காய் செடி வைத்த 45 நாட்களில் பூக்கள் வைக்க தொடங்கும். இந்த பூக்களை உதிராமல் காய்களாக மாற்ற இந்நேரத்தில் அமிலத்தன்மை நிறைந்த கரைசலை கொடுக்க வேண்டும்.

அதாவது, புளித்த மோருடன் தேங்காய் பால் கலந்து கரைசலாக கத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும்.

 how to grow brinjal plant at home in tamil

மேலும், தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், மோர் பெருங்காயத்தூள் கரைசல் என உங்களிடம் எந்த கரைசல் உள்ளதோ அதனை தெளிக்கலாம்.

இவ்வாறு நீங்கள் கத்தரிக்காய் செடி பூக்கள் பூக்கும் நேரத்தில் தெளிப்பதன் மூலம் பூத்த பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றலாம்.

அதன் பிறகு, காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீரை அதன் வேர்பகுதிகளில் ஊற்றி வேண்டும்.

மேலும், மண்புழு உரத்தினை அதன் வேர்பகுதிக்கு மேல் போட்டு கிளறி விடுவதன் மூலம் கத்தரிக்காய் செடி செழித்து வளரும்.

புதினா செடி புதர் போல வளர இதை மட்டும் உரமாக கொடுங்கள்..

கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கரைசல்:

 how to get more brinjal from plant in tamil

கத்தரிக்காய் பெரியதாகவும் பூச்சி இல்லாமலும் வளர கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கலந்த கரைசலை கொடுக்க வேண்டும்.

முதலில் 75% கடலை புண்ணாக்கு மற்றும் 25% வேப்பம் புண்ணாக்கை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாளியில் சேர்த்து  தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளுங்கள்.

இது நன்கு ஊறிய பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் செடியில் புழுக்கள், எறும்புகள் போன்றவை வராமல் இருக்கும்.

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

செடி அவரை கொத்து கொத்தாய் காய்க்க இதை செய்ய மறக்காதீர்கள்..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement