How to Grow Coconut Tree Faster | வீட்டில் தென்னை மரம் வளர்ப்பு
பொதுவாக நாம் நம்முடைய வீட்டில் மரம் வளர்த்தால் தான் மழை பொழியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாம் நம்முடைய வீட்டில் மற்ற மரக் கன்றுகளை நடுகின்றோமோ இல்லையோ கண்டிப்பாக வாழைமரம், தென்னை மரம், வேப்ப மரம் மற்றும் இதர பூக்கன்றுகளையும் வளர்த்து வருவோம். அந்த வகையில் எல்லோருடைய வீட்டிலும் தேங்காயின் அத்தியாவசிய தேவைக்காக கண்டிப்பாக தென்னை மரம் வைத்து இருப்பார்கள். ஆனால் அதனை எப்படி சரியாக பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். இவ்வாறு நாம் சரியாக பராமரிக்கவில்லை என்றால் தென்னை மரம் வளர்ச்சி இல்லாமல் போய்விடும். மேலும் தேங்காய்களை காய்க்காமல் போகிவிடும். அதனால் இந்த பதிவில் தென்னை மரத்தினை எளிய முறையில் பராமரித்து வளர்ப்பதற்கான டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.
தென்னை மரம் நடுவது எப்படி.?
தென்னை மரத்தை பொறுத்தவரை இது மற்ற மரங்களை போல கிடையாது. அதனால் தென்னை மரத்தை எப்போதும் நடுவதற்கு முன்பாக சூரிய ஒளி படும் இடத்தில் நடுவது நல்லது.
அதேபோல் சூரிய இல்லாமல் நிழலாக இருக்கும் இடத்தில் மரத்தினை நடுவதால் மரம் நன்றாக வளர்ச்சி இல்லாமல் போய்விடும்.
Thennai Maram Uram Vaikum Murai:
தென்னை மரத்தினை நடும் போது ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளியாக 7.5 மீட்டர் விட வேண்டும். இவ்வாறு செய்யாமல் அருகிலேயே வைத்தால் மரம் வளராமல் போய்விடும்.
உங்களுடைய வீட்டில் 5 வருடத்திற்கு மேல் உள்ள தென்னம்பிள்ளை இருக்கிறது என்றால் அதற்கு உரம் இடுவதற்கு கீழே பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பொட்டாசியம்- 3 1/2 கிலோ
- பாஸ்பேட்- 2 கிலோ
- யூரியா- 1 1/4 கிலோ
- மக்கிய உரம்- 50 கிலோ
- வேப்பம் புண்ணாக்கு- 5 கிலோ
இப்போது இத்தகைய பொருட்கள் அனைத்தினையும் இரு பிரிவாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாதியை எடுத்து நன்றாக ஜூன் To ஜூலை முதல் தென்னை மரத்திற்கு உரம் அளித்து விட வேண்டும்.
அடுத்த பாதி உரத்தினை இடையில் 3 மாதம் இடைவெளி விட்டு டிசம்பர் To ஜனவரி மாதத்தில் அளித்து விட வேண்டும். இத்தகைய முறையில் உரம் அளித்தால் போதும் தென்னை மரம் நன்றாக வளர்ந்து விடும்.
நீர் பாய்ச்சும் முறை:
தென்னையின் வேர் நன்றாக ஆழமாக இருக்கும். அதனால் தென்னையின் அருகில் ஒரு குழியினை வெட்டி அதில் தண்ணீர் விட வேண்டும். மரம் காய்ந்து போகாத அளவிற்கு நன்றாக தண்ணீர் விட வேண்டும்.
இவ்வாறு நாம் சரியான முறையில் தென்னை மரத்தினை பராமரித்து வருவதன் மூலம் தென்னை நன்றாக வளர்வதோடு மட்டும் இல்லாமல் தேங்காயும் காய்க்கும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |