Grow Coriander Leaves at home Faster..? வெறும் 5 நாட்களில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி..?
நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக நமக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை வீட்டில் வளர்த்தால் நம்மால் பசுமையான காய்களை சுவைக்க முடியும். அதைபோல் விலைவாசியையும் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் சில தாவரங்கள் நமது வீட்டு தோட்டதிலே எளிமையாக வளர்க்கலாம். தின சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி, தக்காளி, மிளகாய் போன்றவற்றை நமது வீட்டிலே எளிமையாக வளர்க்கலாம். அந்தவகையில் இன்று சமையலுக்கு சுவைசேர்க்கும் கொத்தமல்லி நமது வீட்டிலே மண் இல்லாமல் எப்படி பயிர் செய்வது என்றும், அதன் வளர்ச்சியை அதிகரிப்பது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்..
வீட்டிலேயே கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி.?
முதலில் கொத்தமல்லி விதைகளை எடுத்து, இரண்டு இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
10 நாளில் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்
பின்னர் சிறிய துளைகள் உள்ள ஒரு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த துளைகள் உள்ள பாத்திரத்திற்கு கீழ் இதில் இருந்து வடியும் தண்ணீரை சேமிக்க கூடிய ஒரு அகலமான பாத்திரத்தை வைக்க வேண்டும்.
மண் இல்லாமல் கொத்தமல்லி செடி வளர்ப்பு:
இப்பொது துளைகள் உள்ள பாத்திரத்தில் உடைத்து வைத்துள்ள கொத்தமல்லி விதைகளை தூவ வேண்டும். அதாவது விதைகளை விட துளைகள் சிறிதாக இருக்கும் பாத்திரத்தை நீங்கள் தேர்தெடுக்க வேண்டும்.
விதைகளை தூவிய பின்னர் அகண்ட பாத்திரத்தின் மீது விதைகள் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும். இப்போது மெதுவாக விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாத படி தண்ணீரை விதைகள் மீது தெளிக்க வேண்டும்.
தண்ணீர் ஊற்றிய உடன் தொட்டியை அப்படியே வெயிலில் வைத்துவிடக் கூடாது. நிழலில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். விதைகள் முளைக்க ஆரம்பித்த பின்னர் அந்த பாத்திரத்தை சூரிய ஒளியில் வைக்கலாம். 8 முதல் 15 நாட்களில் உங்களின் சமையலுக்கான கொத்தமல்லி வளர்ந்துவிடும்.
ஈசியா கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி?
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |