உங்கள் வீட்டில் டிராகன் பழச்செடியை வளர்க்க ஆசையா..!

Advertisement

How to Grow Dragon Fruit in Tamil

இன்றைய சூழலில் அனைவருமே மாடித் தோட்டம் அமைத்து அதில் தங்களுக்கு விருப்பமான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி நாம் அமைத்துள்ள மாடித் தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சில செடிகள் இருக்கும். அப்படி கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று அனைவரும் விரும்பும் செடிகளில் ஒன்றான டிராகன் பழச்செடியை எவ்வாறு வளர்ப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> டிராகன் பழம் நன்மைகள்

How to Grow Dragon Fruit From Cutting in Tamil:

How to Grow Dragon Fruit From Cutting in Tamil

டிராகன் பழச்செடி ஒரு கற்றாழை வகை செடி என்பதால் இதனை அதனின் கிளையை கொண்டு அல்லது அதன் பழத்தின் விதையை கொண்டும் வளர்க்கலாம். இப்பொழுது நாம் கிளையை கொண்டு எவ்வாறு வளர்ப்பது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

முதலில் நல்ல முற்றிய நிலையில் உள்ள டிராகன் பழச்செடியின் கிளையை வெட்டியோ அல்லது வாங்கியோ கொள்ளுங்கள். பின்னர் மக்கிய சாணம், மணல் மற்றும் செம்மண் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு பிளாஸ்டிக் அல்லது மண்சட்டியில் சேர்த்து அதன் நடுவில் நமது டிராகன் பழச்செடி பற்றி வளர்வதற்காக ஒரு நீளமான குச்சினையும் சொருகிக் கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிறகு நாம் வெட்டி வைத்துள்ள டிராகன் பழச்செடியின் கிளையையும் சொருகி கொள்ளுங்கள். இதனை நன்கு வெயில்படும் இடத்தில் வைத்து தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வந்தால் அது நன்கு வளர்ந்து பழம் காய்க்கும்.

மேலும் ஆறு மாதத்திற்கு  ஒரு முறை மக்கிய மாட்டு சாண உரம் அல்லது மண்புழு உரம் கொடுக்க வேண்டும். மேலே கூறியுள்ள வழிமுறையை பின்பற்றியே டிராகன் பழத்தின் விதையிலிருந்து டிராகன் பழச்செடியை வளர்க்கலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=>20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட்

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 

 

Advertisement