ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க.. வெங்காயம் ஒன்று போதும்..!

Advertisement

How to Grow Faster Jathi Malli Plant in Tamil

இன்றைய சூழலில் அனைவரின் வீடுகளிலும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் பலவகையான செடிகளை வளர்த்தாலும் நமது வீடுகளில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மிக மிக பிடித்து வளர்க்கும் செடிகள் என்றால் அது பூச்செடிகள் தான். ஏனென்றால் பூச்செடிகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அப்படி நாம் மிக மிக அதிக அளவு விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ஒன்று தான் இந்த ஜாதி மல்லி செடி.

இதனை பலரும் விரும்பி தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள். ஆனால் இது ஒரு சில குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும் பூத்துவிட்டு அதன் பிறகு முற்றிலும் பூக்காமல் செடி வாடிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் வருடம் முழுவதும் ஜாதி மல்லி பூச்செடி பூத்து குலுங்குவதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜாதி மல்லி செடி வளர்ப்பது எப்படி.?

Homemade fertilizer for jathi malli plant in tamil

பொதுவாக ஒரு செடி நன்கு வளர் வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது சிறந்த மண்கலவை தான். அதாவது 40% சாதாரண மணல், 30% கம்போஸ்ட், 20% கோகோ பீட் மற்றும் 10 % ஆற்றுமணல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு மண்கலவையை தயாரித்து அதனை நமது ஜாதி மல்லி செடிகளின் மண்கலவையாக வைத்தால் அதி நன்கு வளரும்.

அடுத்து ஜாதி மல்லி செடி நன்கு நீரோட்டமான பகுதியில் வைத்தால் நல்லது. அதேபோல் ஜாதி மல்லி செடியை நன்கு சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில வைத்தால் நன்கு வளர்ந்து அதிக பூக்கள் பூக்கும்.

இப்பொழுது ஜாதி மல்லி நன்கு பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கடலை புண்ணாக்கு – 250 கிராம் 
  2. வேப்பம் புண்ணாக்கு – 150 கிராம்
  3. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர் – தேவையான அளவு

1 கப் நாட்டுச்சர்க்கரை போதும் பூக்காத முல்லை பூச்செடியும் தாறுமாறாக பூக்கள் பூக்கும்

உரம் தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 250 கிராம் கடலை புண்ணாக்கு மற்றும் 150 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு வாரத்திற்கு நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

உரம் இடும் முறை:

பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும் நன்கு வடிகட்டி அதில் 10 மடங்கு தண்ணீரை சேர்த்து நமது ஜாதி மல்லி செடியின் வேர்களை சுற்றி பள்ளம் பறித்து ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை மாதம் இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நமது வீடுகளில் உள்ள ஜாதி மல்லி செடி தாறுமாறாக பூக்கள் பூக்க தொடங்கும்.

உங்க வீட்டில் உள்ள December பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க டிப்ஸ்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement