கொத்து கொத்தாக நெல்லிக்காய் காய்க்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Grow Gooseberry 

நம்முடைய வீட்டை சுற்றி அல்லது வீட்டு மாடிப்பகுதியில் நிறைய மரக்கன்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் விருப்பம். இத்தகைய விருப்பத்தினை நிறைவேற்றும் விதமாக பல வகையான மரக்கன்றுகளை நடுவார்கள். அந்த வகையில் நெல்லிக்காய் மரமும் ஒன்று. நெல்லிக்காய் என்பது பல வகையான சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் நெல்லிக்காய் வீட்டு உபயோகதிற்கு பயன்படும் ஒரு பொருளாகவும் உள்ளது. இவ்வளவு தன்மைகளை கொண்டுள்ள நெல்லிக்காய் மரத்தில் காய்களே காய்க்கவில்லையா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஏனென்றால் இன்று நெல்லிக்காய் மரத்தில் அதிகமாக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

நெல்லிக்காய் அதிகமாக காய்க்க டிப்ஸ்:

நெல்லிக்காய் அதிகமாக காய்க்க டிப்ஸ்

நம்முடைய வீட்டில் நீண்ட நாட்களாக நெல்லிக்காய் மரம் இருக்கும். ஆனால் அத்தகைய நெல்லிக்காய் மரம் ஆனது காய்க்காமலே அப்படி இருக்கும்.

இவ்வாறு நெல்லிக்காய் மரம் காய்க்காமல் இருந்தால் முதலில் அந்த மரத்திற்கு அருகில் கொஞ்சம் ஆழமான குழியினை நோண்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு சிறிய அளவு பெருங்காயத்தை தண்ணீரில் எடுத்து ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த பெருங்காயத் தண்ணீரை அந்தக் குழியின் ஆழத்தில் ஊற்றி விட வேண்டும்.

இப்போது அந்த குழியினை மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நெல்லிக்காய் மரத்தில் நிறைய நெல்லிக்காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..  தாறுமாறாக பூ வைக்கும்.

பஞ்சகாவியம்:

நெல்லிக்காய்

அதேபோல் மழைக்காலத்திற்கு முன்பாக 2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை எடுத்துக்கொண்டு அதனை 50 லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்திற்கு கொடுப்பதன் மூலம் மரம் செழிப்பாக வளர்வதோடு மட்டும் இல்லாமல் காய்களும் நிறைய காய்க்கும்.

அதுமட்டும் இல்லாமல் மரத்தில் பூக்கள் பூப்பதற்கு முன்பாக 300 மில்லி மீன் அமினோ அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் மரத்திற்கு கொடுக்க வேண்டும்.

வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement