Fertiliser For Chilli Plants in Tamil
அனைவருமே வீட்டில் பச்சை மிளகாய் செடி வளர்த்து வருவோம். ஆனால் இந்த செடியில் அதிகமாக பூக்கள் வைத்தாலும் உதிர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் செடியில் மிளகாய் காய்ப்பதற்கு அதிக நாட்கள் ஆகும். எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் பச்சை மிளகாய் செடிக்கு முக்கியமான ஒரு பொருளை கரைசலாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தோம் என்றால் பச்சை செடியில் வைத்த பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும். ஓகே வாருங்கள் பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Green Chilli Plants Faster in Tamil:
முதலில் புளித்த மோரினை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் 1 லிட்டர் புளித்த மோர் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் அதே அளவில் தேங்காய் பாலினையும் எடுத்து கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி நன்றாக மூடி வைத்து விடுங்கள். இதை 7 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.
5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..
7 நாட்களுக்கு பிறகு, இதனை எடுத்து அதில் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் 1 லிட்டர் கரைசல் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் 5 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள்.
இதனை மிளகாய் செடியில் நன்றாக படும்படி தெளித்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தீர்கள் என்றால் மிளகாய் செடியில் அதிக பூக்கள் வைத்து வைத்த பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்.
வாரத்திற்கு ஒருமுறை இந்த கரைசலை தெளித்து விட வேண்டும்.
மற்ற உரங்கள்:
கடலை புண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அதனை கட்டி இல்லாமல் கரைத்து மிளகாய் செடிக்கு உரமாக கொடுத்து வந்தால் மிளகாய் செடி நன்றாக செழித்து வளரும்.
மிளகாய் செடி நடவு செய்யும்போதும், ஒவ்வொரு முறை மிளகாய் அறுவடை செய்யும் போதும் மிளகாய் செடிக்கு அடியுரமாக மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |