வீட்டிற்குள்ளேயே செம்பருத்தி செடி வளர்க்கலாம் எப்படி தெரியுமா.?

Advertisement

செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி தெரியுமா.?

பொதுவாக பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. அதனால் தான் பூச்செடிகளை பார்த்தாலே வாங்கிட்டு வந்துடுவார்கள். அப்படி நீங்கள் வளர்க்கும் பூச்செடியானது பெரும்பாலும் மொட்ட மாடி அல்லது வெளியில் வளர்ப்பது போல தான்இருக்கும். அதில் செம்பருத்தி செடி இல்லாத வீடுகளே இல்லை. எல்லாரும் வீட்டிலும் முன்புறம் அல்லது பின்புறத்தில் கட்டாயம் இருக்கும். இதனால் வாசலில் வைத்தாலே வீடு அழகாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்புறமும் வளர்க்கலாம். அது எப்படி என்று தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகின்றோம்.

வீட்டிற்குள் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி.?

மண் கலவை:

நீங்கள் முதலில் அகலமான  பானையை எடுத்து கொள்ளவும். இந்த பானையின் ஆழமானது 10 அடி இருக்க வேண்டும்.

செம்பருத்தி செடி வளர்ப்பதற்கு களிமண்ணை எடுத்து கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி: 

வீட்டிற்குள் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

சூரிய ஒளி படும் இடத்தில் தான் செம்பருத்தி செடி நன்றாக வளரும். அதனால் நீங்கள் கிழக்கு திசை அல்லது தென்கிழக்கு திசையில் வைத்து கொள்ள வேண்டும். அதவாது குறைந்தது 5 மணி நேரம் 6 மணி நேரம் செம்பருத்தி செடிக்கு சூரிய ஒளி தேவைப்படும்.

உரம்:

எல்லா செடிகளுக்கு உரம் தேவைப்படுவது போல செம்பருத்தி செடிக்கும் உரம் தேவைப்படும். பொட்டாசியம் சத்து நிறைந்த உரத்தை பயன்படுத்த வேண்டும். நான்கு வாரங்களுக்கு ஒரு முறை உரம் பயன்படுத்த வேண்டும்.

மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க 

கிளைகளை நறுக்க வேண்டும்:

செம்பருத்தி செடியானது அதிக கிளைகளுடன் வளர கூடியது, இவை வீட்டிற்கு வெளியே வளரும்போது கிளைகள் வந்தால் பரவாயில்லை. அதுவே வீட்டிற்குள் வளர்க்கும் போது கிளைகள் அதிகமாக வந்தால் தொட்டி சிதறி விடும். அதனால் 6 மாதத்திற்கு ஒரு முறை கிளைகளை நறுக்க வேண்டும்.

தண்ணீர்:

தண்ணீர் ஆனது செம்பருத்தி செடிக்கு முக்கியம், அதுவே நீங்கள் செடியின் வேர் பகுதியில் தான் ஊற்ற வேண்டும். செடியின் மேல் பகுதியில் எல்லாம் தண்ணீர் பட கூடாது. ஏனென்றால் செடிகளின் மேல் பகுதியில் பட்டால் செடி அழுகி விடும்.

மேல் கூறப்பட்டுள்ள முறையைப்பயன்படுத்தி வீட்டின் உள்பகுதியை செம்பருத்தி செடிகளை வளருங்கள்.

குண்டு மல்லி செடியில் பூக்கள் பூத்து குலுங்க எலுமிச்சை பழ தோல் மட்டும் போதும்..

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement