காய்ந்த செடி
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் நிறைய வகையான பூச்செடிகள் வீட்டின் அழகிற்காகவும் மற்றும் தோட்டம் அமைக்க வேண்டும் என்பதற்காகவும் வாங்கி வளர்த்து வருவார்கள். நாம் வளர்க்கும் அத்தகைய செடியானது குறிப்பிட்ட காலம் மட்டும் தான் செழிப்பாக இருக்கும். அதுவே சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் வாடி போகியிருக்கும். நாம் ஆசையாக வாங்கிய செடி வாடி போனால் உடனே கடையில் விற்கும் ஏதாவது உரத்தினை வாங்கி அளிப்போம். ஆனால் இவற்றில் எந்த விதமான பலன்களும் முழுமையாக செடிகளுக்கு சென்றடைவது இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை அளிக்கும் வகையில் இன்றைய பதிவில் வீட்டில் வாடிபோகிறுக்கும் செம்பருத்தி பூச்செடிகளை மீண்டும் எப்படி செழிப்பாக வளரச்செய்வது மற்றும் நிறைய பூக்கள் பூக்க வைப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை செய்யுங்க..
How to Grow Hibiscus Plant Faster:
முதலில் உங்களுடைய வீட்டில் இருக்கும் செம்பருத்தி செடியின் வேர்பகுதியினை சுத்தம் செய்து அதற்கு போதுமான அளவு தண்ணீர் அளித்து கொண்டே வர வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் காய்ந்த இலையினை எல்லாம் அகற்ற வேண்டும்.
இப்போது உங்களுடைய வீட்டில் இருக்கும் பூச்செடியின் அளவிற்கு ஏற்ற அளவு வெந்தயத்தினை தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து ஊற வைத்துள்ள வெந்தயத்திற்கு ஏற்ற அளவு சாதம் வடிக்கும் கஞ்சி நன்றாக ஆறியவாறு உள்ளதை எடுத்துக்கொண்டு இந்த இரண்டினையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள கரைசலிற்கு 15 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து இந்த உரத்தினை செம்பருத்தி செடிகளுக்கு மாலை நேரத்தில் செடிகளின் அடிப்பகுதியினை நன்றாக கிளறி விட்டு அதன் பிறகு உரமாக அளித்து வந்தால் போதும்.
இதையும் படியுங்கள்⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!
செம்பருத்தி பூச்செடிக்கு இந்த வெந்தய கரைசலினை அளிப்பதன் மூலம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் போன்ற சத்துக்களையும், ஒரு பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
ஆகையால் இந்த வெந்தய கரிசலினை 15 நாட்களுக்கு ஒரு முறை உரமாக அளித்து வந்தால் போதும் 2 நாட்களில் செடி செழிப்பாக வளர்ந்து பூக்கள் நிறைய பூக்க ஆரம்பித்து விடும்.
மேலே சொல்லப்பட்டுள்ள உரம் மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் புளித்த மாவு, பழக்கழிவு, காய்கறிக்கழிவு மற்றும் அரிசி கழுவிய தண்ணீர் போன்றவற்றையினையும் உரமாக அளிக்கலாம்.
மேலும் இந்த கரைசலை உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற பூச்செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விடும்.. அதற்கு இந்த கரைசல் போதும்..
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |