How To Grow Hibiscus Plant Faster in Tamil
நாம் அனைவருமே வீட்டில் பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவற்றை வளர்த்து வருவோம். அதிலும் பூச்செடிகளை தான் அதிகமாக விரும்பி வளர்த்து வருவோம்.அப்படி நாம் ஆசையாக வளர்த்து வரும் செடிகள் சில நேரங்களில் பூக்கள் பூக்காமல் இருக்கும். எனவே, அப்படி பூக்கள் பூக்காமல் இருக்கும் செடிகளுக்கு நாம் சில சத்துக்களை உரமாக இட வேண்டும். எனவே, அந்த வகையில் செம்பருத்தி செடியை எப்படி குச்சியிலிருந்து செடியாக வளர்ப்பது.? அதிக பூக்கள் பூக்க வைப்பது உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் அழகிற்காக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று செம்பருத்தி செடி. அதுமட்டுமில்லாமல் இந்த செடியினை அழகிற்காக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது. அதாவது, செம்பருத்தி தலைமுடி வளர்ச்சிக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. எனவே, நமக்கு பல்வேறு வகையில் பயன்படும் செம்பருத்தி செடியை நீங்கள் வளர்க்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Hibiscus Plant From Stem in Tamil:
முதலில், கொஞ்சம் தடினமான உள்ள செம்பருத்தி குச்சியை வெட்டி எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இதிலுள்ள கிளைகள் மற்றும் தழைகளை நீக்கி 15 செ.மீ நீளத்திற்கு நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். இப்போது, ஒரு சிறிய மண்தொட்டி அல்லது உங்கள் வீட்டில் உள்ள சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அதில், தொழுஉரம் கலந்த மண் கலவையை நிரப்பி கொள்ளுங்கள்.
அடுத்து, நறுக்கி வைத்துள்ள செம்பருத்தி குச்சியின் அடிப்பகுதியை லேசாக கீறி விட்டு கற்றாழை ஜெல்லை அப்ளை செய்து கொள்ளுங்கள். இப்போது, இந்த கற்றாழை தடவிய பகுதியை மண்கலவை நிரப்பியுள்ள தொட்டியில் ஊன்றி வைத்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து விடுங்கள்.
அதன் பிறகு, ஒரு பாலிஸ்டிக் கவர் கொண்டு மேற்பகுதியை மூடி விடுங்கள். செம்பருத்தி குச்சி ஊன்றிய 1 மாதத்திற்குள் செடியாக வளர தொடங்கும். இந்நிலையில் தொட்டியில் இருந்து செம்பருத்தி செடியை எடுத்து மண் பகுதியிலோ அல்லது பெரிய மண் தொட்டியிலோ ஊன்றி காலை மாலை என இரு வேலையும் தண்ணீர் ஊற்றி வளருங்கள்.
மல்லி பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க இந்த தண்ணீரை ஊற்றினால் போதுமா
பூக்கள் அதிகம் பூக்க:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில், 500 மில்லி தண்ணீர் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, இதனை நன்கு ஆறவைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செம்பருத்தி செடிக்கு ஊற்றுங்கள். இவ்வாறு நிங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வந்தால் செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க தொடங்கும்.
மேலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செம்பருத்தி செடியின் மண்ணை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். செம்பருத்திக்கு பொட்டாசியம் அதிகமாகவும், பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ள உரங்களை இட வேண்டும். அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி செடியில் மஞ்சள் நிற இலைகள் இருந்தால் அந்த இலைகளை நீக்கிவிட்டு நுண்ணூட்டச்சத்துக்களை செம்பருத்தி செடிக்கு அளிக்க வேண்டும்.
அவரை செடிக்கு இந்த உரத்தினை மட்டும் கொடுங்கள்.. கொத்து கொத்தாய் காய்க்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |