How to Grow Jackfruit at Home in Tamil
மா, பலா, வாழை என்ற முக்கனிகளை யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.! அனைவரும் முக்கனிகளை விரும்புவார்கள். வாழைப்பழம் எப்பொழுதும் கிடைக்கும். ஆனால் சில பழங்கள் அந்தந்த சீசனில் கிடைக்கும். மா சீசன், பலாப்பழம் சீசன் என்றெல்ல்லாம் கூறுவோம். அந்த சீசன் முடிந்தன பிறகு அதை நம்மால் பார்க்க கூட முடியாது. கடைகளில் வாங்கும் பழங்கள் செயற்கை உரம் நிறைந்த பழமாக இருக்கும். அதனால் நீங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். இன்றைய பதிவில் பலாமரத்தை வளராது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பலாமரம் சாகுபடி:
உகந்த மண்:
முதலில் நல்ல பலாமர கன்றை வாங்கி கொள்ளவும்.
பலாமரத்திற்கு உகந்த மண்ணாக களிமண் அல்லது செம்மண் சிறந்த மண்ணாக இருக்கிறது.
குழி:
அடுத்து கன்றை வைப்பதற்கு குழியை நோண்டி கொள்ளவும். இந்த குழியானது 1 மீட்டர் ஆழம் வரை எடுத்து கொள்ளவும். இந்த குழியில் மூன்று நாட்களுக்கு முன்னே ஆட்டு உரம். மண்புழு உரம், தொழு உரம் சேர்த்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக கன்று வைக்கும் இடத்தில் சூரிய ஒளி படுமாறு வைத்து கொள்ள வேண்டும்.
அரை நெல்லிக்காய் கொத்து கொத்தாய் காய்க்க இதனை மட்டும் உரமாக கொடுங்கள்
ஏற்ற காலம்:
பலாமரம் வைப்பதற்கு ஜூன் மதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயிரிடலாம்.
தண்ணீர்:
கன்றை சுற்றி தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு கன்றை சுற்றி குழியை நோண்டி கொள்ளவும். கன்றை வைத்த ஆரம்ப நாட்களில் இருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
கிளைகளை நறுக்க வேண்டும்:
கன்று வளர்ந்ததும் ஒரு கிளையிலே அதிகமாக பிஞ்சு இருந்தால் அதனை நீக்கி விட வேண்டும். ஏனென்றால் அதிக வெயிட்டை சிறிய மரம் தாங்காது. அது போல மரம் உயரமாக வளர்ந்தால் கிளைகளை நறுக்கி விட வேண்டும்.
உரம்:
மாதத்தில் ஒரு முறை குழியை நோண்டி விட்டு உரத்தை போட்டு கிளறி விடவும். இது போல செய்வதினால் ஏற்கனவே இட்ட உரமானது செட் ஆகிரிகும். அதை கிளறி விடும் போது மரத்திற்கு சத்துக்களை வழங்குகிறது.
வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |