பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Advertisement

How to Grow Jackfruit Tree Faster 

பொதுவாக ஒவ்வொரு ஆண்டிலும் பருவநிலை மாற்றங்கள் என்பது நடந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என்று ஒவ்வொரு காலம் என்பது உள்ளது. அந்த வகையில் பார்த்தால் தற்போது பலாப்பழம் மற்றும் மாம்பழம் சீசன். இத்தகைய இரண்டு பழங்களும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடகூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கும் பழங்களை விட வீட்டில் காய்க்கும் பழங்களின் சுவை என்பது தனியாக தெரியும். ஆனால் வீட்டில் நாம் வளர்க்கும் மரங்களை பராமரித்தல் என்பது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஒரு சிலர் வீட்டில் பல வருடங்களாக ஆகியும் காய்கள் காய்க்காமலே உள்ளது. எனவே இன்றைய விவசாயம் பதிவில் மரத்தில் நிறைய பலாப்பழம் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

பலா செடியில் இருந்து அதிக காய்கள் காய்க்க:

jackfruit tree growing tips in tamil முதலில் நீங்கள் நேரடியாக பலா மரத்தினை நட்டாலோ அல்லது பலா விதை மூலமாக நட்டாலோ போதுமான இடைவெளி என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதனால் குறைந்தபட்சம் ஒவ்வொரு செடிக்கும் 25 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

 

தண்ணீர் அளித்தல்:

பலா செடி காய்ந்து போகாத அளவிற்கு எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தண்ணீரை நீங்கள் சரியான அளவிற்கு அளிக்க வேண்டும்.

அரை நெல்லிக்காய் கொத்து கொத்தாய் காய்க்க இதனை மட்டும் உரமாக கொடுங்கள் 

உரமிடும் முறை:

உரமிடும் முறை

முதலில் நீங்கள் பலாமரத்திற்கு மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் என இவை அனைத்தும் கலந்த உரத்தினை 30 கிராம் அளிக்க வேண்டும். மேலும் இவற்றின் அளவு 1:2:4:8 என்ற முறைப்படி மட்டுமே இருக்க வேண்டும்.

அடுத்து 3 மாதம் கழித்த பிறகு முதலில் அளித்த உரங்களின் அளவினை விட 30 கிராம் அதிகமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் முதல் 2 வருடத்தில் பலா மரத்திற்கு உரம் அளித்தால் போதும் மரம் நன்றாக வளர்ந்து விடும்.

2 வருடங்கள் கழித்த பிறகு உங்களுடைய வீட்டில் இருக்கும் பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள், மர இழைகள் என இவற்றை எல்லாம் நீங்கள் தவறாமல் உரமாக அளித்தால் செடி நன்றாக வளர்ந்து காய்களும் காய்க்க ஆரம்பித்து விடும்.

இத்தகைய முறையில் நீங்கள் உரங்களை அளித்தால் போதும் 3-வது வருடத்தில் பலா மரத்தில் காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும். மேலும் காய்களும் மரத்தில் அதிகமாக காய்க்கும்.

மேலும் மண்புழு போன்ற இயற்கை உரத்தினையும் அளித்தால் காய்கள் நிறைய காய்க்கும்.

வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement