Jade Plant Easy To Grow in Tamil
ஜேட் செடியானது அடர்த்தியான தண்டுகள் மற்றும் இலைகளை கொண்ட ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் ஆகும். இதனை லக்கி பிளான்ட் என்றும் அழைப்பார்கள். இந்த செடி சுமார் 3 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது ஆகும். இத்தாவரம் Crassulaceae குடும்பத்தைச் சேர்ந்தவை. இது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தது மற்றும் மிதமான தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடியது. இச்செடியை நீங்கள் வீட்டின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியில் வளர்க்கலாம். இச்செடியில் வசந்த காலத்தில் வெள்ளை நிற பூக்கள் பூக்கும். ஆனால் இச்செடி பூனை மற்றும் நாய்களுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது. இருந்தாலும் இச்செடி வீட்டில் வளர்த்தால் செல்வ செழிப்பு உண்டாகும் என்பதால் பெரும்பாலான வீடுகளில் லக்கி பிளான்ட் வளர்க்கப்படுகிறது. ஓகே வாருங்கள் நாமும் வீட்டில் இந்த செடியை வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Jade Plant at Home in Tamil:
ஜேட் செடியை ஈசியாக வீட்டிலே வளர்க்கலாம். இதற்கான பராமரிப்பு முறை மிகவும் குறைவு. அதாவது மற்ற தாவரங்களை விட இதனை ஈசியாக வளர்த்து விடலாம்.
செடிகளை வளர்க்க நேரம் இல்லாதவர்கள் கூட இந்த செடியை வளர்த்து விடலாம். அந்த அளவிற்கு இதனின் வேலை குறைவு.
புதினா செடி புதர் போல வளர இதை மட்டும் உரமாக கொடுங்கள்..!
ஜேட் செடி வளர்க்க முதலில் ஒரு சிறிய அளவிலான தொட்டியை எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்கள் தேவையான அளவு மண் நிரப்பி கொள்ளுங்கள்.
இதில் ஈரப்பதம் இருக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வாங்கி வந்த ஜேட் செடியை நட்டு விடுங்கள்.
அதன் பிறகு 4 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது ஜேட் செடியின் மண் காய்ந்தவுடன் அதற்கு தண்ணீர் இட வேண்டும்.
இச்செடியை பகல் நேரத்தில் 18 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும். இரவில் 10 முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
3 நாளில் குண்டு மல்லி பூ செடி துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை ட்ரை பண்ணுங்க..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |