மல்லிப்பூ செடியில் பூக்கள் பெரிதாகவும், கொத்து கொத்தாகவும் பூக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

மல்லிகை பூ அதிகம் பூக்க

பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே ஒரு தனி விருப்பம். இத்தகைய வரிசையில் பார்த்தால் பூக்களே எனக்கு பிடிக்காது என்று கூறும் நபர்களும் இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ என்றால் பெண்கள் தான் முதலில் நினைவிற்கு வருவார்கள். அதனால் பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே மல்லிகைப் பூ செடியினை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீட்டில் வளர்க்கும் மல்லிகைப் பூவிற்கும், கடைகளில் விற்கும் மல்லிகைப் பூவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதாவது வீட்டில் வளர்க்கும் போக்கால் அளவில் பெரியதாக இருக்கும். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் மல்லிகைப் பூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் பூப்பது இல்லை. ஆகவே இன்று வீட்டில் இருக்கும் மல்லிகைப்பூ செடியில் பூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.

செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..

கொத்து கொத்தாக மல்லிகைப்பூ பூக்க:

மல்லிப்பூ செடியினை எப்போதும் மிதமான வெயில் இருக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் செடி காய்ந்து போகாத அளவிற்கு தண்ணீர் விட்டு கொள்ள வேண்டும்.

 மல்லிகை பூ அதிகம் பூக்க

செடியில் மொட்டுகள் அதிகம் வைத்து பூக்கள் நிறைய பூக்க வேண்டும் என்றால் அதற்கு பொட்டாசியம் சத்து மிகவும் முக்கியம். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிக்க வேண்டும்.

  • வெங்காயத் தூள்- 1 கைப்பிடி அளவு 
  • எலுமிச்சை தோல்- 1
  • வெப்பம் புண்ணாக்கு- சிறிதளவு 
  • தண்ணீர்- 1 லிட்டர் 

முதலில் ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் இத்தகைய பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து அதில் 1 லிட்டர் தண்ணீரையும் ஊற்றில் 2 நாட்கள் வரை மூடி வைத்து விடுங்கள்.

2 நாட்கள் கழித்த பிறகு இந்த கரைசலை வடிக்கட்டி கொள்ளுங்கள். இந்த கரைசலை நீங்கள் 1 டம்ளர் எடுத்துக் கொண்டால் அதற்கு சமமான அளவு தண்ணீரை அதில் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தப்படியாக இந்த கரைசலை மல்லிப்பூ செடிகளுக்கு மாதம் ஒரு ஊற்றினால் போதும் செடிக்கு தேவையான பொட்டாசியம் சத்து கிடைத்து பூக்கள் நன்றாக பெரியதாகவும், கொத்துக் கொத்தாகவும் பூக்க ஆரம்பித்து விடும்.

பூச்சிகளின் தாக்குதல்:

மல்லிப்பூ செடிகளுக்கு பூச்சிகளின் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் பூச்செடியின் அடியில் இருக்கும் மண்ணை நன்றாக கிளறி விட வேண்டும்.

மஞ்சள் பொடி

பின்பு 1/2 மஞ்சள்தூள் எடுத்து அந்த மண்ணில் போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மஞ்சள்தூளில் இருக்கும் எதிர்ப்பு பண்புகள் செடியினை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க வெங்காயம் மட்டும் போதும்..

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement