வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருட்களை கொண்டு உங்க வீட்டு மல்லி செடியை கொத்து கொத்தாக பூ பூக்க வைக்கலாம்…

Updated On: August 9, 2023 12:18 PM
Follow Us:
how to grow jasmine flower at home use of Homemade Fertilizer in tamil
---Advertisement---
Advertisement

மல்லிகை செடியில் கொத்து கொத்தாக பூ பூக்க

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த மல்லிகை பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் மல்லி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிச் செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்…

கொத்து கொத்தாக பூ பூக்க:

மல்லிகை செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:

how to grow jasmine flower at home use of Homemade Fertilizer in tamil

மல்லி பூ செடிகளின் வேர்களில் மாட்டு சாண எருது மணலுடன் கலந்து வைப்பதால், அது செடிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது. மாட்டு சாணத்தால் கிடைக்கும் ஊட்டசத்தால் மல்லிகை செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.

மல்லிகை பூ அதிகம் பூக்க:

நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் காபி தூள் அல்லது டீ க்கு பயன்படுத்தும் டீ தூள்களை வடிகட்டிய பின் சிறிது நேரம் காயவைத்த பின்பு செடிகளில் ஈடுவதால் செடி மிக செழிப்பாக வளரும். அதிக மலர்களை தரும்.

how to grow jasmine flower at home use of Homemade Fertilizer in tamil

நீங்கள் சமையலில் பயன்படுத்திவிட்டு தூக்கியெரியும் காய்கறி கழிவுகள், பழ கழிவுகள், முட்டை ஓடு போன்றவற்றை செடியின் வேர்களில் ஈடுவதால் செடிகள் அதிக ஆரோக்கியத்துடனும் செழிப்பாகவும் வளரும்.

how to grow jasmine flower at home use of Homemade Fertilizer in tamil

காய்கறி மற்றும் பழ கழிவுகளில் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதால் அதிக பூக்கள் பூக்கும்.

மல்லிகை பூக்கள் சிறந்த முறையில் மலர மற்றும் சிறந்த வாசனைக்கு போதுமான அளவு சூரிய ஒளி தேவை. 6 மணிநேரம் சூரிய ஒளியும் பின்பு நிழலும் இருப்பதுபோல் உங்கள் செடியை நட்டுவைத்தல் அதிக விளைச்சலை தரும். மல்லிகை செடிக்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை.

மல்லிகை பூக்கள் பூத்து முடித்ததும் மல்லிகை செடிகளை கிளைகளை சிறிது வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி மீண்டும் துளிர்த்து அதிகப்படியான விளைச்சலை தரும்

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now