வெறும் 3 நாட்களில் காய்ந்த ஜாதி மல்லி செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க பீட்ரூட் மட்டும் போதும்..!

Advertisement

How to Grow Jathi Malli Plant Faster in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தாவரங்கள் வளர்ப்பதின் மீதான ஆர்வம் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நம்மில் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் பூச்செடிகளில் ஒன்று தான் ஜாதி மல்லி பூச்செடி. ஏனென்றால் பூக்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததும் மிகவும் வாசம் மிக்கதும் தான் இந்த ஜாதி மல்லி. அதனால் இதனை அனைவருக்கும் மிக மிக பிடிக்கும். அப்படி ஜாதி மல்லி பூச்செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது ஜாதி மல்லி பூச்செடியை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் ஜாதி மல்லி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

நட்டு வைத்த 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

ஜாதி மல்லி செடி அதிக பூக்கள் பூக்க:

Jathi malli chedi athiga pookal pooka tips in tamil

நாம் அனைவருக்கும் மிக மிக பிடித்த பூக்கள் வகைகளில் ஒன்று தான் இந்த முல்லை பூ. அதனால் இதனை நாம் அனைவருமே நமது வீடுகளில் உள்ள தோட்டத்திலும் மாடித்தோட்டத்திலும் இந்த ஜாதி மல்லி பூச்செடிகளை மிகவும் விரும்பி வளர்ப்போம்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளருக்கும் ஜாதி மல்லி பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட் தோல் – 2 கைப்பிடி அளவு 
  2. எலுமிச்சை பழத்தோல் – 8
  3. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர் – தேவையான அளவு

வைத்த 15 நாட்களிலேயே ஜாதி மல்லி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு பீட்ரூட் தோல் மற்றும் 8 எலுமிச்சை பழத்தோல் ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அது நன்கு ஊறுவதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்து ஒரு வாரத்திற்கு நன்கு ஊறவிடுங்கள்.

பிறகு அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் நமக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உங்கள் வீட்டின் ஜாதி மல்லி பூச்செடிகளின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உற்றுவதன் மூலம் உங்கள் வீட்டின் ஜாதி மல்லி பூச்செடி நன்கு கொத்து கொத்தாக பூக்கும்.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement