வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வைத்த 15 நாட்களிலேயே ஜாதி மல்லி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Updated On: September 30, 2023 7:30 AM
Follow Us:
how to grow jathi malli plant in tamil
---Advertisement---
Advertisement

How To Grow Jathi Malli Plant in Tamil

ஜாதிமல்லி பூ அதிக வாசனை உடையது. இதனால் பெரும்பாலான வீடுகளில் ஜாதிமல்லி செடியை வளர்க்க நினைப்பார்கள். இதனால் நர்சரிகளில் விற்கும் ஜாதிமல்லி செடியை வாங்கி பதியம் போடுவார்கள். ஆனால் ஜாதிமல்லி செடியை நர்சரிகளில் வாங்குவதை விட நாமே பதியம் போட்டு வைக்கும் செடிகளில் தான் அதிக பூக்கள் பூக்கும். எனவே ஜாதிமல்லி செடியை வீட்டில் எப்படி பதியம் போடுவது..? பதியம் போட்ட 15 நாட்களிலே எப்படி துளிர்விட செய்வது.? போன்றவற்றை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜாதிமல்லி செடி பதியம் போடுவது எப்படி.?

 ஜாதிமல்லி செடி வளர்ப்பு

முதலில் நன்கு வளர்ந்த ஜாதிமல்லி செடியின் ஒரு கிளையை எடுத்து கொள்ளுங்கள். முக்கியமாக அந்த கிளை இரண்டு கணுக்கள் உள்ள கிளையாகவும் நன்கு தடித்த கிளையாகவும் இருக்க வேண்டும்.

பிறகு, ஒரு மண் தொட்டியில் செம்மண் மற்றும் தொழுஉரம் கலந்த மண் கலவையை நிரப்பி கொள்ளுங்கள். இந்த மண்ணில், ஜாதிமல்லி செடியின் கிளையை எடுத்து அதன் இரண்டு கணுக்களும் மண்ணில் பதியுமாறு புதைத்து வைக்க வேண்டும்.

அடுத்து இதன் மேல் மண்ணினை கொண்டு மூடி செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும்.

5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க

வெறும் 3 நாட்களில் காய்ந்த ஜாதி மல்லி செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க பீட்ரூட் மட்டும் போதும்

ஜாதிமல்லி செடிக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். அளவுக்கு அதிகமான தண்ணீரை ஊற்ற கூடாது.

ஜாதிமல்லி செடியில் வேர் வரும் வரை அசைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

செடி வைத்த 15 ஆட்கள் அல்லது 20 நாட்களிலே வேர்விட்டு துளிர்விட தொடங்கிவிடும். துளிர்விட தொடங்கும் நிலையில் செடியினை தொட்டியிலிருந்து எடுத்து வேறொரு பெரிய தொட்டிற்கோ அல்லது மண்ணிலோ புதைத்து வைக்க வேண்டும்.

இதிலிருந்து இன்னொரு ஜாதிமல்லி செடியை கூட பதியம் போட்டு வளர்ந்துகொண்டே போகலாம்.

ஜாதிமல்லி செடி வளர வளர அதில் உள்ள மொட்டுக்களை பறித்து விட்டு மேலே உள்ள அதன் கிளைகளை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதில் அதிக பூக்களை பூக்க செய்யலாம்.

உரமிடும் முறை:

ஜாதிமல்லி செடிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இயற்கை உரம் இடுதல் வேண்டும். அதாவது, மண்புழு உரம், தொழுஉரம் மற்றும் காய்கறி கழிவு உரம் போன்றவற்றை இடுதல் வேண்டும்.

செடியில் பூச்சு தாக்குதல் ஏதும் இருப்பின் அதற்கு வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now