மாமரத்தில் அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும்..

Advertisement

மாமரத்தில் அதிக காய்கள் காய்க்க

பலரது வீட்டிலும் வீட்டிற்கு உபயோகமுள்ள பழம் அல்லது காய்கறி, பூச்செடி போன்றவற்றை வளர்ப்பார்கள். அதில் ஒன்று தான் மாமரம். மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதில் பல வகைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலும் ஒட்டு மாங்காயை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். சில நபர்கள் எந்த செடி வைத்தாலும் அவை உடனே வளர்ந்து விடும். சில பேர் எந்தசெடியை வைத்து விட்டு அதனை முறையாக பராமரித்தாலும் வருடத்திற்கு ஒரு 10 அல்லது 15 மாங்காய்களுக்கு மேல் காய்க்காது. அதனால் தான் இந்த பதிவில் மாமரத்தில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் இன்று தெரிந்து கொள்வோம் வாங்க..

How to Grow Mango From Seed in Tamil:

மண் கலவை:

மண் கலவை

மாங்கன்னுக்கு வைப்பதற்கு தோண்டப்படும் குழியில் மண் கலவையானது செம்மண் சிறிதளவு, மண்புழு உரம் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளளவும். அதன் பிறகு அதன் மேல் மாங்கன்னை வைக்க வேண்டும்.

உரம்:

மாங்காய் மரத்திற்கு உரமாக ஆட்டு சாணம், மாட்டு சாணம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு இந்த உரத்தை கொடுக்க வேண்டும். மரத்திற்கு மேலே இந்த உரத்தை கொடுக்க கூடாது. மாங்காய் மரத்தை சுற்றியுள்ள இடத்தில் குழியை நோண்டி, அதில் உரத்தை சேர்த்து கிளறி விட வேண்டும். ஏன் இப்படி செய்கிறோம் என்றால் நீங்கள் போடும் உரம் அப்படியே அதில் படிந்து விடும். நீங்கள் இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை இப்படி கிளறி விடும் போது மரத்திற்கு சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் அடுப்பு எரித்து பயன்படுத்தும் சாம்பலை உரமாக கொடுக்க வேண்டும். இதை கொடுப்பதால் பூக்கள் உதிராமல் காய்கள் அதிகமாக காய்க்கும் .

முருங்கை மரத்தில் பூச்சிகளை விரட்டி பூக்கள் உதிராமல் இருக்க மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க 

தண்ணீர் கொடுப்பது:

மாமரத்தில் அதிக காய்கள் காய்க்க

மரத்தை சுற்றி எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். முக்கியமாக காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதே போல் மாலை நேரத்திலல் 5 மணி முதல் 6 மணி வரை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

முக்கியமாக நீங்கள் மரத்தை நட்டு விட்டு உரத்தையும் , தண்ணீரையும் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது. நீங்கள் ஒவ்வொரு முறையும் உரத்தை கொடுக்கும் போது வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று கவனிப்பது அவசியமானது. நீங்கள் கொடுக்கும் உரத்திற்கு பலன் இருக்கிறதா மற்றும் பூச்சி தொல்லை இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement