சாமந்தி பூ உற்பத்தி அதிகரிக்க
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே ஒரு தனி விருப்பம். இத்தகைய வரிசையில் பார்த்தால் பூக்களே எனக்கு பிடிக்காது என்று கூறும் நபர்களும் இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக சாமந்திபூ என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே சாமந்திபூ செடியினை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வீட்டில் வளர்க்கும் சாமந்திபூவிற்கும், கடைகளில் விற்கும் சாமந்திபூவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதாவது வீட்டில் வளர்க்கும் போக்கால் அளவில் பெரியதாக இருக்கும். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் சாமந்திபூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் பூப்பது இல்லை. ஆகவே இன்று வீட்டில் இருக்கும் சாமந்திபூ செடியில் பூக்கள் பெரியதாகவும், கொத்து கொத்தாகவும் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.
சாமந்தி பூ செடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி
சாமந்தி செடியை எப்படி பராமரிப்பது
சாமந்தி செடிகளை பராமரிப்பது எளிது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் செடிகளை பாதுகாத்தால் உங்கள் விட்டு சாமந்தி பூ செடி அதிக பூக்களுடன் உங்கள் இடத்தை பிரகாசமாக்கும்.
சூரிய ஒளி
சாமந்தி வளர்ச்சிக்கு சூரியனின் ஒளி அவசியம். இந்த செடிகளின் வளர்ச்சிக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் முழு சூரிய ஒளி சிறந்தது.
இடம்
சாமந்தி செடிகள் சூரிய ஒளியில் தேவைப்படுவதால் சூரியஒளி சீராக படும்படி நீங்கள் உங்கள் செடியை நட வேண்டும்.
மண்
சாமந்தி செடிகளுக்கு அதிக மண் தேவையில்லை. எந்த தோட்ட மண்ணிலும் அமிலத்தன்மை இல்லாதவரை மற்றும் போதுமான தண்ணீரை வழங்கினால் அவை நன்றாக வளரகூடியது. இந்த சாமந்தி களி மண்ணில் சிறப்பாக வளரும். மண்ணின் pH 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.
தண்ணீர்
உங்கள் வீட்டில் சாமந்தி விதை சீரான தண்ணீர் வசதியினை உறுதிப்படுத்த வேண்டும். சிறந்த முறையில் பூக்க வாரந்தோறும் நீர்ப்பாசனம் அவசியம்.
வெப்ப நிலை
சாமந்திப்பூக்களுக்கு உகந்த வெப்பநிலை 18 முதல் 20 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இந்த சாமந்தி செடிகள் அதிக வெப்பத்தையும் தாங்கும்.
உரம்
சாமந்தி பூவுக்கு பொதுவாக உரம் தேவையில்லை. உங்கள் மண் மோசமாக இருந்தால், விதைகளை நடும் போது சிறுமணி உரத்தைப் பயன்படுத்தலாம். இந்த உரம் 8 முதல் 12 வாரங்கள் செயலில் இருக்கும்.
சாமந்தி பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் கவனியுங்க…
காய்க்காத மிளகாய் செடியில் கிலோ கணக்கில் காரமான காய் காய்க்க நிலக்கடலை மட்டும் போதும்..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |