தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

Advertisement

மண்ணில்லா விவசாயம்

இன்றைய  காலகட்டத்தில் நமக்கு தேவையான உணவுப்பொருட்களை முடிந்தவரை நமே தயாரிப்பது சிறந்தது. காரணம் ஏறிவரும் விலைவாசியும், பூச்சிக்கொல்லிகளும் தான். நாம் உண்ணக்கூடிய பாதிஉணவுகள் கலப்படம் மிக்கதாகத்தான் நமக்கு கிடைக்கிறது. பசுமையை காய்கள் கீரைகள் பார்க்க, செழிப்பாக இருந்தாலும் கூட அவை, அதிக பூச்சிக்கொல்லிகளை கொண்டு உருவாக்கியதாக உள்ளது. சரி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நமே சில காய்மற்றும், மற்றும் கீரைகளை வளர்க்கலாம் என்றால், அடுக்குமாடி கட்டிடங்களில் நடுவே மண்ணை எங்கு தேடுவது. ஆனால் அதற்கும் இப்போது நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. ஆனால் அவற்றை எல்லாம் பயன்படுத்தி நமக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் செடிகளை வளர்க்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியாது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்க்க எப்படியும் நமக்கு ஒரு நாளைக்கி சில மணி நேரங்களாவது தேவைப்படும். ஆனால் நமக்கு ஒய்வு கிடைப்பதே அந்த சிலமணி நேரங்கள் தான். அதனால் அதிலும் நம்மால் பயிர் செய்ய முடிவதில்லை. இதற்கெல்லாம் தீர்வாக ஒரு புதிய முயற்சி உங்களுக்காக. நமக்கு சில மணிநேரங்கள் சில நிமிடங்கள் ஒதுக்கி நமக்கு தேவையான கீரை வகைகளை வீட்டிலே மண் இல்லாமல் பயிர்செய்யலாம். அதுவும் 5 நாட்களில் உங்களில் சமையலுக்கான கீரைகளை பெறலாம். விதவிதமான சமையலே செய்து சாப்பிட நினைக்கும் உங்களுக்கு வெந்தய கீரையில் சப்பாத்தி செய்து சாப்பிடவும் ஆசை இருக்கும். ஆனால் அதன் சந்தை விலையை கேட்டால் மலைப்பாக இருக்கும். ஆகவே இன்று வெந்தய கீரையை வீட்டிலே மண் இல்லாமல் பயிர்செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.

வீட்டிலேயே வெந்தய கீரை வளர்ப்பது எப்படி.?

மண் இல்லாமல் வளர்க்கும் முறை:

முதலில் ஒரு நீளமான பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் Tissue பேப்பர்களை 5 முதல் 6 அடுக்குகளாக பாத்திரம் முழுவதும் அடுக்க வேண்டும்.

man illamal venthaya kirai valarpathu

பின்னர் Tissue மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். அதாவது Tissue-வின் அனைத்து பகுதியும் ஈரமாகும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பின்னர் அதன் மேல் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தை தூவி விட வேண்டும்.

venthaya kirai valarpu in tamil

அடுத்ததாக வெந்தயத்தின் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்

கடைசியாக வெந்தயத்தை மறைக்கும் படி, வெந்தயத்தின் மேல் பகுதி முழுவதும் Tissue பேப்பரை 2 அடுக்குகளாக அடுக்க வேண்டும். பின்னர் அதன் மேலும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இந்த பாத்திரத்தை உங்கள் சமையலறை அல்லது வெயில்படாத இடத்தில் வைக்கலாம்.

நீங்கள் மறுநாள் அந்த வெந்தயத்தின் மேல் உள்ள Tissue பேப்பரை எடுத்துவிட்டு வெந்தயத்தின் மீது மீண்டும் அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் அந்த Tissue பேப்பரை கொண்டு மீண்டும் வெந்தயத்தின் மீது மூடிவிட வேண்டும். இதை போல் 5 நாட்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் சமையலுக்கு தேவையான வெந்தய கீரை உங்களுக்கு கிடைத்துவிடும்.

venthaya kirai valarpu

உங்களுக்கு தேவையான கீரைகளை கத்திரிக்கோல் கொண்டு கத்தரித்து பயன்படுத்தலாம். மீண்டும் அந்த வெந்த செடியில் தண்ணீர் தெளித்த வளர்க்க தொடங்கலாம். அடுத்த 5 நாட்களில் உங்களுக்கு தேவையான கீரைகள் கிடைத்துவிடும். இதை போல் தொடர்ந்து பயிரிடலாம்.

வீட்டு தோட்டத்தில் கொத்துக் கொத்தாக கொத்தவரங்காய் காய்க்க சில Tips….

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement