How to Grow More Flowers in Rose Plant in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த ரோஜா பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். இப்படி உங்க வீட்டில் உள்ள ரோஜா பூச்செடியிலும் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டு ரோஜா பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
1 கப் தேங்காய் பால் போதும் மாதுளை செடியில் உள்ள பிஞ்சிகள் அனைத்தும் காய்களாக மாற
Natural Fertilizer for Rose Plant in Tamil:
பெண்களுக்கு மிகவும் பிடித்த பல பூக்களில் இந்த பன்னீர் ரோஜா பூவும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பன்னீர் ரோஜா பூ செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
- கடுகு – 50 கிராம்
- வேர்க்கடலை – 50 கிராம்
- வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 2 லிட்டர்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் கடுகு மற்றும் 50 கிராம் வேர்க்கடலையை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
ஒரே ஒரு கிளாஸ் மட்டும் இதை ஊற்றுங்கள் குச்சியாக இருந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்
பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனுடனே நாம் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை பத்து நாட்கள் அப்படியே விடுங்கள்.
அதன் பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள கரைசலை ஊற்றி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதில் இருந்து 1 கப் மட்டும் எடுத்து உங்கள் பன்னீர் ரோஜா பூ செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா பூ செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
ஒரே ஒரு வாழைக்காய் போதும் பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |