பன்னீர் ரோஜா செடியை தாறுமாறாக பூக்க வைக்கும் இயற்கை கரைசல்..! How to Grow Paneer Rose Plant in Tamil
பூக்காத பன்னீர் ரோஸ் செடியிலும் பூக்கள் தாறுமாறாக பூத்து குலுங்க வேண்டுமா? அப்படியென்றால் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்கள் மற்றும் ரோஸ் செடிக்கு ஊட்டமளிக்கு ஒரு இயறக்கை கரைசலை மாதத்திற்கு தயாரித்து செடிக்கு ஊற்றுங்கள். பூக்காத பன்னீர் ஒசே செடியும் பூத்து குலுங்கும். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம்.
பன்னீர் ரோஸ் செடிக்கான இயற்கை கரைசல் செய்முறை:
தேவையான பொருட்கள்:
- வறுத்த வேர்க்கடை – 10 கிராம்
- கடுகு – 10 கிராம்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மொட்டுகளிலிருந்து ரோஸ் செடி வளர்க்கும் முறை..!
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் வேர்க்கடை மற்றும் கடுகு இரண்டையும் சேர்த்து நன்றாக பவுடர் போல் அறிந்துகொள்ளுங்கள்.
பிறகு ஒரு 1 லிட்டர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அரைத்த பவுடர் மற்றும் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை மூடிவிடவும் இந்த கலவையை 10 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். ஆக நிழல் உள்ள இடத்தில் இந்த பாட்டிலை வைத்து 10 நாட்கள் ஊறவைக்கவும். இந்த பத்து நாட்களில் தினமும் குறைந்தபட்சம் மூன்று முறையாவது பாட்டிலை குளிக்கிவிட வேண்டும்.
10 நாள் கழித்து பாட்டிலை திறந்து அந்த கரைசலை 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிடவும்.
அவ்வளவு தான் கரைசல் தயார். இந்த கரைசலை ரோஸ் செடிக்கு ஒரு கிளாஸ் மட்டும் ஊற்றினால் போதும். ஒரு மாதத்திற்கான சத்துக்கள் அனைத்தும் அந்த செடிக்கு கிடைத்துவிடும். செடிகள் நன்கு வளர்த்து பூக்கள் பூத்து குலுங்கும்.
பன்னீர் ரோஜா செடிக்கான டிப்ஸ்:
பொதுவாக பன்னீர் ரோஸ் செடியை குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது வெயில் இருக்கும் இடத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும். நீங்கள் பன்னீர் ரோஸ் செடியை நிழல் உள்ள இடத்தில் வைத்தீர்கள் என்றால் பூக்கவே பூக்காது.
பன்னீர் ரோஸ் செடியில் மொட்டுக்கள் பொதுவாக கொத்து கொத்தக்கதான் வைக்கும், அவற்றில் சில மொட்டுக்கள் மட்டும் பூக்காமலேயே இருந்துவிட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று பூச்சிகள் மற்றொன்று பொட்டாசியம் குறைபாடு ஆகும்.
பூச்சிகள் தாக்குதல்களுக்கு என்ன செய்யலாம் என்றால் தண்ணீரை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்கு போர்சாக தண்ணீரை ஸ்ப்ரே செய்தால் பூச்சிகள் அனைத்தும் அகன்றுவிடும். அல்லது வேப்பண்ணெய் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் ஆகியவரை பயன்படுத்தலாம். அல்லது சாம்பல் பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பொட்டாசியம் குறைபாடாக இருந்தால் அந்த மொட்டுகள் விரியாமலேயே போய்விடும் அதற்கு என்ன செய்யலாம் என்றால் வாழைப்பழம் தோலை இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை மட்டும் செடிகளுக்கு ஊற்றம் இவ்வாறு செய்தால் பொட்டாசியம் குறைபாடு நீங்கும். அல்லது ஒரு ஸ்பூன் சாம்பலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். இவ்வாறு செய்தாலும் பிரச்சனை சரியாகும்.
பன்னீர் ரோஸ் செடியில் பூக்களை கட் செய்யும் போது இலைகளோடு சேர்த்து கட் செத்தால் பூக்கள் நிறைய பூத்து குலுங்கும்.
பொதுவாக எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அவற்றில் பூக்கள் புத்தவுடன் அவற்றை பறித்துவிடுவது மிகவும் சிறந்து. அப்பொழுது தான் செடியின் நிறைய துளிர்கள் விட்டு பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும்.
அதேபோல் பன்னீர் செடி மிகவும் உயரமாக வளரக்கூடியது ஆக செடியை உயரமாக வளர விடாமல் நிறைய துளிர்கள் வருபடி கட் செய்துகொள்ளுங்கள்.
பொதுவாக ரோஸ் செடியில் 7 இலைகள் இருந்தால் அந்த செடி பூக்காது. ஆனால் பன்னீர் பூ செடியில் மட்டும் 7 இலைகள் இருந்தாலும் பூத்து குலுங்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |