மாதுளை அதிகம் காய்க்க
பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் செடி வளர்க்க ஆசையாக இருக்கும்.ஒரு சிலருக்கு பூ செடி வளர்க்க ஆசையாக இருக்கும், ஒரு சிலருக்கு பழம் வளர்க்க ஆசையாக இருக்கும். செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி பராமரிக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் செடியை வைத்தவுடன் அதுவே காய்கள் காய்க்காது. அதனால் நம் பதவில் தினந்தோறும் ஒவ்வொரு வகை செடியையும் எப்படி பராமரிக்க வேண்டும், அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
மாதுளை செடியில் அதிக காய்கள் காய்க்க டிப்ஸ்:
தண்ணீர்:
மாதுளை செடியை வெயில் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் என்று பார்த்தால் வாரத்தில் ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றினால் போதும். ஏனென்றால் மாதுளை செடியானது வறட்சியிலும் வளர கூடியது. மண்ணிலிருந்து அதற்கு தேவையான நீரை எடுத்து கொள்ளும். அதுவே நீங்கள் மாடியில் வளர்க்கிறீர்கள் என்றால் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அமிலத்தன்மை:
மாதுளைக்கு மண்ணில் அமிலத்தன்மை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அமிலத்தன்மை இருந்தால் தான் மாதுளையில் காய்கள் அதிகமாக காய்க்கும்.
செடி முருங்கைக்கு இந்த ஒரு கரைசலை கொடுங்கள்.. தாறுமாறாக காய்கள் காய்க்கும்
அமிலத்தன்மையை அதிகரிப்பதற்கு 1 தேக்கரண்டி சமையல் வினிகரை எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு லிட்டரில் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இதனை மாதம் ஒரு முறை செடிக்கு ஊற்ற வேண்டும்.
உரம்:
மாட்டு சாணம், வேப்பம்புண்ணாக்கு போன்றவை கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் Epsom salt கலந்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும். இதனை செடியின் மேல் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
அடுத்து தேமோர் கரைசல் கொடுக்க வேண்டும்.
கிளைகளை நறுக்க வேண்டும்:
கிளைகள் அதிகமாக இருந்தால் நறுக்க வேண்டும். கிளைகள் அதிகமாக இருந்து அதில் எந்த விதமான காய்களும் இல்லாமல் இருந்தால் எந்த பயனும் கிடையாது. அதனால் பக்க கிளைகள் அதிகமாக இருந்தால் நறுக்கி விட வேண்டும்.
மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்.. தாறுமாறாக பூ வைக்கும்…
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |