குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இந்த ஒரு கரைசல் போதும்..!

Advertisement

Best Fertilizer For Rose Plant in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் Best Fertilizer For Rose Plant in Tamil பற்றி கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே வீட்டில் பலவகையான காய்கறி செடிகள், பூச்செடிகள் மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருவோம். முக்கியமாக அனைவரது வீட்டிலும் ரோஸ் செடி வளர்த்து வருவோம். ஆனால் இந்த ரோஸ் செடியானது நாம் எதிர்பார்த்த அளவிற்கு வளராமலும் ப[பூக்களை தராமலும் இருக்கும். அதாவது உங்கள் ரோஜா செடி வைச்சது வைச்சபடி வளராமல் அப்படியே இருக்கும். எனவே அப்படி இருக்கும் ரோஜா செடிக்கு நாம் சில ஊட்டச்சத்துக்களை இடுவதன் மூலம் ரோஜா செடியை துளிர்விட வைக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

ரோஜா செடி மூன்று நாட்களில் துளிர்விட என்ன செய்ய வேண்டும்.?

முதலில் ரோஜா செடியின் நுனிப்பகுதியோ அல்லது பக்கவாட்டில் உள்ள தண்டுப்பகுதியோ காய்ந்துப்போய் இருந்தால் அதனை வெட்டி விட வேண்டும்.

அதன் பிறகு, வெட்டிய தண்டு பகுதியின் மேல் தொழுவுரத்தை சிறிதளவு தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும்.

அடுத்து, 1 பேக்கெட் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். அதில் 2 சொம்பு அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்நிலையில் 2 ஸ்பூன் அளவிற்கு சீயக்காயை இத்துடன் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்

 how to make fertilizer for rose plant at home in tamil

இந்த கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி மூடி வைத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அதனை எடுத்து ரோஜா செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் ரோஜா செடி உடனே சில நாட்களிலேயே துளிர்விட ஆரமித்து மொட்டுகள் வைக்கும்.

ஜேட் செடி (லக்கி பிளாண்ட்) வீட்டில் வளர்ப்பது எப்படி.?

ரோஜா செடி அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்.?

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 3
  • முட்டை ஓடு – 3
  • தண்ணீர் – 1/2 லிட்டர்

முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சிறிய சிறிய துண்டுக்காக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அடுத்து இதில் 1/2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, உலர்ந்த முட்டை ஓடுகளை எடுத்து நன்கு பொடியாக்கி கொள்ளுங்கள். இந்த பொடியை வாழைப்பழ கரைசலுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

Best Fertilizer For Rose Plant in Tamil

இந்த கரைசலை ரோஜா செடியின் அடிப்பகுதியில் ஊற்ற வேண்டும். முக்கியமாக இந்த கரைசலை ஒவ்வொரு மாதமும் ரோஜா செடிக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ரோஜா செடி விரைவில் மொட்டுகள் வைத்து அதிகமாக பூக்க தொடங்கும்.

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement