வீட்டில் சொடக்கு தக்காளி வளர்ப்பது எப்படி.?

Advertisement

How To Grow Sodakku Thakkali Plant

சொடக்கு தக்காளி மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடி ஆகும். இது தக்காளி செடி வகையை சார்ந்தது. இச்செடி பார்ப்பதற்கு மணத்தத்தக்காளி செடி போன்று இருக்கும். முக்கியமாக சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளது. எனவே நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் இந்த சொடக்கு தக்காளியை எப்படி வீட்டில் வளர்ப்பது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பொதுவாக, இந்த செடியினை பற்றி பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த செடியினை நாம் கிராமப்புறங்களில் சாலை ஓரத்திலும், வயலில் வரப்பு ஓரத்திலும் பார்த்து இருப்போம். அதுமட்டுமில்லாமல் இதனை நாம் சிறு வயதில் உடைத்து விளையாடியும் இருப்போம். ஓகே வாருங்கள், சொடக்கு தக்காளி செடி வளர்க்கும் முறை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சொடக்கு தக்காளி செடி வளர்ப்பது எப்படி.?

சொடக்கு தக்காளி செடி வளர்ப்பது எப்படி

சொடக்கு தக்காளி தானாக சாலையோரங்களில் வளரும் தன்மை உடையதால், மற்ற செடிகளை விட இந்த செடியை வீட்டில் எளிதான முறையில் வளர்த்து விடலாம். ஆகையால் முதலில், நாட்டு மருந்து கடைகளிலிலோ அல்லது வயலில் உள்ள செடிகளில் இருந்தோ அதன்  விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, ஒரு மண் தொட்டியிலோ அல்லது குரோ பேக்கிலோ தொழுஉரம், மண்புழு உரம் மற்றும் மட்கிய இலை தழைகள் கலந்த மண்கலவையை சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து, இந்த சொடக்கு தக்காளி செடியின் விதைகளை மண்கலவையில் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து விடுங்கள். மேலும், தினமும் ஒருவேளை மண்கலவை ஈரப்பதத்துடன் இருக்கும் அளவிற்கு மிதமான அளவில் தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.

தக்காளி செடி யில் தாறுமாறாக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..

விதை போட்ட ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் செடி முளைக்க தொடங்கிவிடும். அதன் பிறகு, செடி நன்றாக வளர தொடங்கிவிடும். அதுமட்டுமில்லாமல், இந்த செடியில் இருந்து அதிக செடிகள் வளரவும் தொடங்கும்.

மேலும், மாதம் ஒருமுறை தொழுஉரம், மண்புழு உரம் மற்றும் மட்கிய இலை தழைகள் கலந்த உரத்தினை மேலுரமாக கொடுத்து வர வேண்டும்.

மானிய விலையில் விவசாயிகளுக்கு களை எடுக்கும் மெஷின்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement