ஆன்மிக மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த துளசி செடி செழிப்பாக வளர வேண்டுமா ..அப்போ இந்த 3 Tips follow பண்ணுக…

Advertisement

துளசி வளர்ப்பு 

நமக்கு மிகவும் பயனுள்ள தாவரத்தில் துளசியும் ஒன்று. அதுவும் இந்த புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவது நமக்கு சகல பாக்கியங்களையும் வழங்குமாம். இதுமட்டும் இல்லங்க துளசி நமது உடல் ஆரோக்கியம் முதல் வீட்டின் நேர்மறையான எண்ணம் உருவாக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஆமாங்க, உங்கவீட்டில் ஒரு துளசி செடி இருந்த போதும், அதன் வாசம் உங்கள் வீட்டை கிருமிகளிடம் இருந்தும் காக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கான மூலிகையாக இருக்கும். இன்னும் பல நன்மைகள் இந்த துளசி செடியில் உள்ளது. இவ்வளவு நன்மைகள் உள்ள துளசி செடி உங்க வீட்ல இருக்க, இருந்த அத காய விடாதீங்க. அப்படி உங்க வீட்டில துளசி செடி இல்லனா கவலை வேண்டாம். இன்று நட்டாலும்  நாட்களில் துளிர் விட ஆரம்பித்துவிடும் கவலை வேண்டாம். நீங்க உடனே உங்கள் வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நடுங்க. உங்க துளசி செடி வாடாமல் இருக்கவும் சீக்கிரம் துளிர்விடவும் மேலும் அதிலுள்ள ஆன்மிக மற்றும் ஆரோக்கிய பயன்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…

துளசி வளர்ப்பு:

how to grow tulsi plant

வீட்டில் துளசி வளர்ப்பு பொறுத்த வரை, துளசி செடிகளை அதிகம் வெயில் படும் இடங்களில் வைக்க கூடாது. துளசி செடிக்கு போதுமான அளவு நிழலும் வெயிலும் தேவை. அதாவது 6 மணி நேரம் வெயிலும் 6 மணி நேரம் நிழலும் இருக்குமாறு பார்த்துகொள்ளவது நல்லது.

துளசி செடிக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் விட்டு மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

துளசி செடி வளர்ப்புக்கு ஏற்ற மண் களிமண் மற்றும் செம்மண் துளசியின் பசுமையான இலைகளை வழங்கும்.

துளசி செடிக்கு பெரியளவில் உரங்கள் தேவையில்லை, நீங்கள் விரும்பினால் காய்  மற்றும் பழ கழிவுகள், மண் புழு உரம் ஈடலாம்.

துளசி செடி பெரிய பெரிய இலைகளையும், அடர்த்தியான கிளைகளையும் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதன் விதை பகுதிகளை காம்புடன் சேர்த்து வெட்டி விட வேண்டும்.

வாரம் ஒருமுறை அதன் காம்பு பகுதிகளை வெட்டி அதனை உரமாக கொடுங்கள். கண்டிப்பாக உங்கள் துளசியின் பக்கக் கிளைகள் வளர்ந்து நன்கு பச்சை பசேலென பெரிய இலைகளை கொடுக்கும்.

துளசியின் பயன்கள்:

துளசி இலைகளால் பெருமாள், லக்ஷ்மி போன்ற கடவுள் படங்களுக்கு அர்ச்சனை செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டு பண்ணும்.

துளசி இலைகள் மற்ற செடிகளுக்கு உரமாக பயன்படும்.

சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement