காய்க்காத மிளகாய் செடியில் கிலோ கணக்கில் காரமான காய் காய்க்க நிலக்கடலை மட்டும் போதும்..!

Advertisement

Chilli Plants Growth using Home Remedies

பலரது வீட்டிலும் வீட்டிற்கு உபயோகமுள்ள பழம் அல்லது காய்கறி, பூச்செடி போன்றவற்றை வளர்ப்பார்கள். அதில் ஒன்று தான் பச்சை மிளகாய் செடி. பச்சை மிளகாய் அனைத்துவிதமான சமையல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி முக்கியமான காய்வகையை நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் போது அது சரியாக காய்க்கவில்லை என்றால் கவலையாகத்தான் இருக்கும். அந்தவகையில் இன்று மிளகாய் செடியில் அதிக அளவு காய்கள் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் உங்களுக்கத்தான் இந்த பதிவு. விவசாயத்தில் புதுமையை பயன்படுத்தி எப்படி உங்க வீட்டு மிளகாய் செடியை கரமாக அதிக விளைச்சலை உருவாக்குவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாங்க. உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் பயனுள்ள குறிப்புகளை பற்றி அறிந்து உங்களது வீட்டு தோட்டம் செழுமையடையா எங்களுடைய வாழ்த்துக்கள். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

how to increase chilli plant growth using home remedies in tamil

மிளகாய் விளைச்சலை அதிகரிக்க குறிப்புகள்:

how to increase chilli plant growth

1. பசுமையான விளைச்சலுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்டும் கரிம உரத்தைப் பயன்படுத்தலம். அதாவது முட்டை ஓடுகள், காய் மற்றும் கனி கழிவுகள், பயன்படுத்திய தேனீர் தூள் ஆகியவை நீங்கள் உங்கள் செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.

அல்லது தூக்கி எரியும் தேநீர்த்தூள், முட்டை ஓடு மற்றும் வெங்காயத் தோல் ஆகியவற்றை நன்றாக உலர்த்தி பிறகு அரைத்து அதனை உங்கள் செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்,

2. காய்ந்த மிளகாய் விதைகளை விதைப்பதற்குப் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும், நீங்கள் பழுத்தவற்றைப் பயன்படுத்தினால் , விதைகளை நேரடியாக விதைக்கலாம்.

பூக்காத செம்பருத்தியும் கொத்துக் கொத்தாக பூ பூக்க வீட்டில் இருக்கும் இந்த 1 பொருள் போதுமே!

how to increase chilli plant growth

3. மிளகாய் செடிகளுக்கு நிலக்கடலைப் பிண்ணாக்கு சேர்க்கலாம்.

4. அரிசி கழுவும் தண்ணீரை நீங்கள் உங்கள் செடிக்கு பாய்ச்சலாம். இதன் மூலம் உங்கள் செடி நல்ல வளர்ச்சி பெரும்.

5. நீர்த்த அரிசி நீரை அடிக்கடி செடிகளின் மீது தெளித்து வந்தால் வெள்ளை ஈ போன்ற பூச்சிகளை விரட்டலாம்.

6. ஒரு கப் அரிசி தண்ணீரில் ஒரு கைப்பிடி சாம்பலைச் சேர்த்து, இருபது கப் தண்ணீரில் கரைத்து, மிளகாய் செடியின் மீது ஊற்றலாம். அவை செடிகளை வேகமாக பூக்க வைக்கும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement