செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை மட்டும் செய்யும்கள் போதும்..!

How to Increase Flowering in Hibiscus in Tamil

செம்பருத்தி செடியில் பூக்கள் பூக்க டிப்ஸ் | How to Increase Flowering in Hibiscus in Tamil

பொதுவாக அனைவரது வீட்டிலேயும் பூ செடிகளை வளர்க்க ஆசை இருக்கும். அதன் காரணமாக பூ செடிகளை வாங்கி ஆசையாக வளர்ப்போம். இருந்தாலும் குறிப்பிட்ட நாட்களில் அந்த பூச்செடி இறந்துவிடும். அல்லது செடிகள் நன்றாக வளர்ந்து வந்தாலும் அவற்றில் பூக்களே பூக்காது. நாமும் செடியில் இன்று பூக்கும், நாளை பூக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம். நீங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க மட்டும் செய்யாமல். செடியில் பூக்கள் நிறைய பூப்பதற்க்கான விஷயங்களையும் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் செப்பருத்தி பூ செடி இருந்து அவற்றில் பூக்கள் சரியாக பூக்காமல் இருந்தால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள் போதும், உங்கள் வீடு செம்பருத்தி செடியில் நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சரி வாங்க செம்பருத்தி செடியில் பூக்கள் பூக்க டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை மட்டும் செய்யும்கள் போதும்..! | How to Increase Flowering in Hibiscus in Tamil

செம்பருத்தி

டிப்ஸ்: 1

உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி பூ செடியை நீங்கள் தொட்டியில் வைத்திருந்தாலும் சரி அல்லது நிலப்பரப்பில் வைத்திருந்தாலும் சரி. வாரத்தில் ஒரு முறை செடியின் வேர் பகுதில் உள்ள மண் பகுதியை லேசாக கிளறிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம். செடிகளுக்கு நிறைய ஈரப்பதம் கிடைக்கும். மண்ணிற்கும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

டிப்ஸ்: 2

மழைக்காலம் வந்துவிட்டால் செடியில் உள்ள கிளைகளின் முனையை கிள்ளிவிட வேண்டும். அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது செடிகளை நறுக்கிவிட வேண்டும் .இவ்வாறு செய்தால் தான் செடியில் நிறைய கிளைகள் துளிர் ஆரம்பிக்கும். பிறகு பூக்களும் நிறைய பூக்க ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் செடிகள் பசுமையாக வளர்வதற்கு வீட்டிலேயே கரைசல் தயாரிக்கலாம்..!

டிப்ஸ்: 3

செம்பருத்தி செடிகள் சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் வைத்து வளர்த்தால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள அந்த சூரிய ஒளிமூலமாகவே கிடைக்கும். இதன் மூலம் செடிகள் நன்கு வளர்த்து பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும்.

டிப்ஸ்: 4

உங்கள் செம்பருத்தி பூ செடியில் மொட்டுக்கள் உதிர்வு பிரச்சனை இருந்தால் வேப்பம்புண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை செடிகளின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள். இவ்வாறு ஸ்ப்ரே செய்வதன் மூலம் செடியில் மொட்டுக்கள் உதிர்வு பிரச்சனை இருக்காது.

டிப்ஸ்: 5

உங்கள் வீட்டு செடியில் வெள்ளை நிறத்தில் பூஞ்சைகள் தொல்லை இருந்தால். செடியில் எந்த கிளையில் அந்த பூஞ்சை இருக்கிறததோ அதனை மட்டும் கட்செய்துவிடுங்கள். அதனை கட் செய்யாமல் இருந்தால் பிறகு அந்த செடி முழுவதும் வெள்ளை பூஞ்சைகள் பரவி செடியை வீணாகிவிடும். ஆக உங்கள் வீட்டு செடியில் பூஞ்சைகள் தொல்லை இருந்தால் உடனடியாக அந்த கிளையை வெட்டிவிடுங்கள்.

டிப்ஸ்: 6

உங்கள் செடியின் வேர் பகுதில் காய்கறி தோலினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி செடியில் போட்டுவிடலாம். இப்படி செய்வதன் மூலம் அதுவும் உங்களுள் செடிக்கு இயற்கை உரமாக மாறிவிடும். செடிக்கு நீங்கள் தனியாக உரம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. செடிகளும் நன்கு வளர்ச்சியடையும்.

டிப்ஸ்: 7

உங்கள் பூ செடியில் நிறைய பூக்கள் பூக்க வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை Rose Mix என்ற உரத்தை 1/2 ஸ்பூன் என்ற அளவில் மண்ணில் சேர்த்து கிளறிவிடலாம். இந்த உரத்தை செடிகளுக்கு கொடுப்பதன் மூலம் பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஜா செடி, மல்லிகை செடி, மட்டுமில்லை எல்லா பூச்செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க இதை செய்யுங்க

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்