How To Make Roses Bloom Quickly in Tamil
வீட்டில் எல்லோருமே அழகிற்காக பல வகையான பூச்செடிகளை வளர்த்து வருகின்றோம். ஆனால் மற்ற செடிகளை விட ரோஜா செடிகளை தான் அதிகமாக வளர்த்து வருவோம். அதுமட்டுமில்லாமல் அந்த செடிகளில் நிறைய பூக்கள் பூப்பதற்காக பல வகையான செயற்கை உரங்களை போட்டு இருப்போம். ஆனால் செயற்கை உரங்களை பயன்படுத்தாமலேயே நம் வீட்டில் இருக்கும் தக்காளியை வைத்து ரோஜாக்களை அதிகமாக பூக்க வைக்கலாம். வாருங்கள் தக்காளியை வைத்து ரோஜா செடியில் அதிகமான பூக்களை பூக்க வைப்பது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
ரோஜா செடியில் நிறைய பூ பூக்க:
தக்காளியில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அதிலும் அழுகிய நிலையில் உள்ள தக்காளியில் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த தக்காளியை ரோஜா செடிக்கு கொடுப்பதன் மூலம் ரோஜா செடி நன்கு துளிர் விட்டு பூக்கள் பூக்க ஆரமிக்கும்.
மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..! |
தேவையான அளவுகள்:
ரோஜா செடிகளின் எண்ணிக்கை | தண்ணீர் | தக்காளி |
1 ரோஜா செடி | 1/2 லிட்டர் | 1 தக்காளி |
4 செடி | 2 லிட்டர் | 4 தக்காளி |
தக்காளியை ரோஜா செடிக்கு பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு தக்காளியை (அழுகிய தக்காளி அல்லது சாதாரண தக்காளி) எடுத்து அதை 4 துண்டுகளாக வெட்டி 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள்.
பிறகு, அதை கையால் நன்றாக பிசைந்து விடுங்கள். நன்றாக பிசைந்து விட்டால் தான் தக்காளியில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள் தண்ணீரில் இறங்கும்.
தக்காளியை தண்ணீரில் நன்றாக கரைத்த பிறகு, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இதை குறைந்தபட்சம் 2 நாட்கள் அல்லது அதிகபட்சமாக 1 வாரம் வரை ஊறவைக்கலாம். இவற்றை நன்றாக ஊறவைத்தால் தான் தக்காளியில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள் அதிகமாக பெருகும்.
ரோஜா இதழை வைத்து முகத்தை என்றும் பளிச்சென்று வெள்ளையாக இருக்க செய்யலாம்..! |
1 வாரம் கழித்ததும் அதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டாமல் அப்படியே ரோஜா செடிகளுக்கு ஊற்றுனீர்கள் என்றால் தக்காளி செடிகள் முளைத்து ரோஜா செடிகள் வீணாகிவிடும்.
எனவே அதை வடிகட்டி ரோஜா செடிகளுக்கு ஊற்றுங்கள். ஒரு செடிக்கு கண்டிப்பாக 1/2 லிட்டர் தக்காளி கரைசல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்தால் தக்காளியில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள் ரோஜா செடியில் சேர்ந்து ரோஜாக்கள் அதிகமாக பூக்கும்.
இந்த தக்காளி கரைசலை நீங்கள், பூக்காமல் இருக்கும் ரோஜா செடி, துளிர் வராமல் இருக்கும் ரோஜா செடி, பட்டு இருக்கும் ரோஜா செடி போன்றவற்றிற்கு கொடுக்கலாம்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |