கொய்யா விளைச்சலை அதிகரிக்க
கொய்யா சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தலை சிறந்தது. ரொம்ப சீப்பாக எப்போதும் கிடைக்கும் பழம் என்றால் அது கொய்யாப்பழம் தான். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கொய்யா மரத்தின் இலை, காய், கனி பட்டை இப்படி எல்லாமே நமக்கு பயன்படக் கூடியது. வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்த்தாலே போதும் உங்க பிணிகளை ஓட்டி விட முடியும். அத்தகைய சிறப்புமிக்க கொய்யாமரம் உங்கள் வீட்டில் உள்ளதா, ஆனால் அந்த கொய்யாமரம் சரியாக காய்க்கவில்லையா? கவலைவேண்டாம். இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் மரத்தின் விளைச்சலை அதிகரியுங்கள்….
கொய்யாவிளைச்சலுக்கு தேவைப்படும் சத்துக்கள்:
கொய்யாமரத்தில் பூக்கள் வைக்க:
கொய்யா மரத்திற்கு வளர்ச்சிக்கு போதுமான அளவு சூரிய ஒளி தேவை அதனால் சூரியஒளி போதுமான அளவு காணப்படும் இடத்தில் கொய்யச்செடியே நடவுசெய்யுங்கள். அல்லது அடம்பலாக இல்லாத இடத்தில் வையுங்கள்.
அதிக பூக்கள் பூக்க தண்ணீருடன் 25% யூரியா அல்லது துத்தநாக சல்பேட்டை சேர்த்து பூக்கள் பூக்கும் முன் மரங்களில் தெளிக்கலாம். துத்தநாகம் தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது. யூரியா, அதிக பூக்கள் வைக்க உதவுகிறது.
கொய்யா மரத்தில் பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்..!
கொய்யா விளைச்சலை அதிகரிக்க :
மாட்டுச் சாணம், தழைச்சத்து போன்றவற்றை ஜூன்-ஜூலை அதாவது மழைக்காலத்திற்கு முன்பு கொடுக்கலாம். இதனால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கொட்டாது. நைட்ரஜனை செப்டம்பர்-அக்டோபரில் மழை காலம் முடிவதற்கு முன்பும் கொடுக்கலாம்.
மாட்டுச் சாணம், மண்புழு உரம் அல்லது கரிம உரங்களான அசோஸ்பைரில்லம், PSB மற்றும் வேப்பம் பிண்ணாக்கு, கொய்யா ஒரு செடியில் சேர்ப்பதால் உற்பத்தி அதிகரிப்பதுடன் தரமான பழங்களை பெறலாம்.
கொய்யா மரத்தில் பிஞ்சுகள் கொட்டாமல் இருக்க இதை மட்டும் ஊற்றுங்கள்..!
கொய்யா தண்டிலிருந்து 2-3 அடி தூரத்தில் எருவை கொட்டவும். 10-15 நாட்கள் இடைவெளியில் விளைச்சலுக்கான பாசனத்தைத் தொடரலாம். பூ, பூக்கும் மற்றும் காய்க்கும் போது வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும்.
பழத்தின் அளவை அதிகரிக்க 0.5 போரிக் அமிலம், 0.3% துத்தநாக சால்பேட் 0.2% காப்பர் சல்பேட் போன்றவற்றை கலந்து தெளிப்பதன் மூலம் கொய்யா பழத்தின் அளவை உயர்த்தலாம்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |