எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க இதை செய்யுங்கள்..!

How To Lemon Tree Grow With Fruit in Tamil

How To Lemon Tree Grow With Fruit in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் நம் வீட்டில் கொய்யா, மாதுளை, சீதாப்பழம் போன்ற காய்கள் காய்க்கும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் மரங்களில் எலுமிச்சை மரமும் ஓன்று.

இந்த எலுமிச்சை மரத்தை வீட்டில் 2 வருடங்களாக வளர்க்கிறோம். ஆனால் காய்கள் காய்க்கவே இல்லை. அதுபோல பூக்களும் கொட்டி விடுகின்றன என்று சொல்லி பலரும் புலம்புகிறார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்று இந்த பதிவின் மூலம் எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

எலுமிச்சை மரம் வளர்ப்பு முறை: 

How To Lemon Tree Grow With Fruit in Tamil

முதலில் எலுமிச்சை மரம் வளர்ப்பவர்கள், அந்த மரத்தை சுற்றி தண்ணீர் நிற்கும் அளவிற்கு குழி தோண்ட வேண்டும். அப்போது தான் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் எலுமிச்சை மரத்திற்கு நீர் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

எலுமிச்சை மரம் குளிர் தாங்காத மரம் என்பதால் அதை வெயில்படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

அதுபோல எலுமிச்சை மரத்தின் அடிப்பகுதியில் காய்ந்த இலைதழை மற்றும் வைக்கோல் வைத்து பின் அதன் மேல் மண்ணை வைத்து மேடாக மாற்ற வேண்டும்.

இப்படி செய்வதால் நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. அதுபோல இது சில நாட்களில் மரத்திற்கு மக்கிய உரமாக மாறிவிடுகிறது.

அதேபோல எலுமிச்சை மரத்திற்கு காலை மாலை என 2 வேளையும் தண்ணீர் ஊற்றுவது அவசியமான ஓன்று.

இதற்கு கால்நடை சாணங்கள், மட்கிய உரங்கள், மண் புழு உரம், வேப்பம் அல்லது கடலை பிண்ணாக்கு போன்றவற்றை எல்லாம் உரமாக போடலாம்.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ..! Lemon Juice Payangal

 

எலுமிச்சை மரத்தில் காய்கள் காய்க்க டிப்ஸ்: 

எலுமிச்சை மரத்தில் காய்கள் காய்க்க டிப்ஸ்

எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க 2 வாரங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு மாட்டு சாணத்தை தொழுஉரமாக போடலாம்.

இப்படி போடுவதால் பூக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும். அதுபோல பூக்கள் அதிகமாக பூக்கும் நேரத்தில் தேங்காய் பால் மற்றும் மோரை கலந்து செய்யும் தேமோர் கரைசலை தெளிக்கலாம்.

இதுபோல தேமோர் கரைசலை தெளிப்பதால் பூக்கள் கொட்டாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், புளித்த மோரினை எலுமிச்சை மரத்தை சுற்றி தெளித்து வரலாம். இதனால் காய்கள் அதிகளவில் காய்க்கும்.

எலுமிச்சை மரத்தில் பூச்சி தாக்குதல் வராமல் தடுப்பதற்கு சாம்பலை மரத்தை சுற்றியும், இலைகளின் மேல் புறத்திலும் தூவி விடலாம்.

இதுபோன்ற முறைகளை பின் பற்றி வந்தால் எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகளவில் காய்க்கும்.

கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..!

 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்