பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெருமபாலனவர்கள் செடிகளுக்கு அதிக கவனம் செலுத்தி சரியாக தான் பராமரித்து வருகின்றேன், ஆனால் செடிகளில் பூக்கள் ஒன்று இரண்டு தான் பூக்கின்றது என்று கவலைப்படுவார்கள். இனி கவலை வேண்டாம் உங்கள் வீட்டில் எந்த பூச்செடி இருந்தாலும் சரி இந்த கலவையை மட்டும் ஊற்றுங்க பூக்கள் பூத்து குலுங்கும். சரி வாங்க என்ன கலவை என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்:
நிறைய நபர்களுக்கு இருக்க கூடிய சந்தேகம் பூச்செடி நன்றாக வளருகிறது ஆனால் பூக்கள் மட்டும் பூக்க மாட்டிகிறது என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். சரி வாங்க கலவை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
கலவை தயாரிப்பது எப்படி.?
முதலில் ஒரு பக்கெட் எடுத்து கொள்ளவும், அதில் 3 லிட்டர் அல்லது 4 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதனுடன் 50 ml முதல் 70 ml புளித்த தோசை மாவை ஊற்றி கலக்க வேண்டும். இந்த புளித்த மாவை 3 அல்லது 4 நாட்கள் வரை மாவு புளிக்க வைக்க வேண்டும்.
நீங்கள் எந்த அளவிற்கு மாவை புளிக்க வைத்து பயன்படுத்தும் போது அதில் இயற்கையான பாக்ட்ரியா உருவாகும். இவை தான் செடிகளுக்கு நுண்ணுயிர் சத்துக்களை தருகிறது. இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவதால் பூக்கள் அதிகமாக பூக்கும்.அப்போ மாவை நேரடியாக செடிகளுக்கு ஊற்றினால் பூக்கள் அதிகமாக பூக்கும் என்று நினைக்கலாம். இப்படி மட்டும் செய்திடாதீங்க.. எப்பொழுதுமே நாம் எந்த கலவையை ஊற்றினாலும் நேரடியாக ஊற்ற கூடாது. அதை டைல்யூட் செய்து ஊற்றினால் தான் செடிகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
கலவையை எப்போது பயன்படுத்த வேண்டும்:
இந்த கலவையை காலை 6 முதல் 7 மணிக்குள் இல்லையென்றால் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஊற்ற வேண்டும். முக்கியமாக இந்த கலவையை ஊற்றுவதற்கு முன்பு செடிகளில் தண்ணீர் ஊற்ற கூடாது. இந்த கலவையை ஊற்றிய பிறகு தண்ணீர் ஊற்றலாம்.
புளித்த மாவு கலவையை இரண்டு நாட்கள் ஒரு தடவை என்று வாரத்தில் 3 முறை பயன்படுத்தலாம்.
செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |