முல்லை பூ காடு போல் பூத்து குலுங்க இதை மட்டும் முல்லை செடிக்கு கொடுங்க..!

Advertisement

How to More Flowers Bloom on The Mullai Plant in Tamil

பூச்செடி என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். அதனால் நாம் அனைவருமே வீட்டில் நிறைய பூச்செடிகளை வளர்த்து வருவோம். அப்படி நாம் வளர்த்து பூச்செடிகளில்  நிறைய பூக்கள் பூத்தால் தான் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அப்படியில்லாமல் பூக்கள் பூக்காமல் செடி மட்டும் வளர்ந்து கொண்டே இருந்தால் வெறுப்பாகத்தான் இருக்கும். செடிகளில் பூக்களை அதிகமாக பூக்க வைக்க நாம் பல விதமான முறைகளை செய்தாலும் சில செடிகளில் பூக்கள் பூக்காது அல்லது மெதுவாக பூக்கும். அந்த வகையில் நம் வளர்ப்பு செடிகளில் ஒன்றான முல்லை செடி அதிகமாகவும் விரைவாகவும் பூத்து குலுங்க இப்பதிவில் சில முறைகளை கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து முல்லை செடியில் பூக்கள் அதிகமாக பூக்க வைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முல்லை செடியில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்..?

மண் கலவை:

மண் கலவை

முதலில் செம்மண் அல்லது உங்கள் வீட்டு பகுதிகளில் கிடைக்க கூடிய மண் வகைகளில்  எதாவது ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மாட்டு எருது அல்லது ஆட்டு எருது, மக்கிய தேங்காய் நார், இலை தழைகள் போன்றவற்றை கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள்.

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

 

எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?

உங்கள் வீட்டு பகுதிகளில் எந்த இடத்தில் சூரிய ஒளி நன்றாக படுகிறதோ அந்த இடத்தில் முல்லை செடியை வைக்க வேண்டும்.

தண்ணீர் கொடுக்கும் முறை:

தண்ணீர் கொடுக்கும் முறை

முல்லை செடிக்கு தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இது சூரிய ஒளியில் தான் நன்றாக வளரும் எனவே அதற்கேற்ப தண்ணீரும் முல்லை செடிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.

கிளைகளை வெட்டி விடுதல்:

முல்லை செடியில் உள்ள கிளையை வளர வளர வெட்டி விட வேண்டும். கிளைகளை வெட்டாமல் அப்படியே விட்டு விட்டால் செடி மட்டும் தான் காடு போல் வளரும். அதில் செடிகள் பூக்கும் தன்மை குறைந்து விடும்.

நீங்கள் செடியின் கிளைகளை வெட்டி விட்டால் தான் கிளைகள் இரண்டாக பிரிந்து அதிக மொட்டுகள் வைக்க தொடங்கும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

 

காய்கறி கழிவு:

காய்கறி கழிவு

வீட்டில் இருக்கும் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கழிவுகளை முல்லை செடிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் முல்லை செடி வேகமாக மொட்டுகள் வைக்க தொடங்கும்.

அதுமட்டுமில்லாமல் வாழைப்பழ தோலில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே வாழைப்பழ தோலை அரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முல்லை செடிக்கு கொடுக்கலாம். 

இதனை நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.

சாம்பல் கரைசல்:

சாம்பலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாதத்திற்கு ஒருமுறை சாம்பல் கரைசலை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை எல்லாம் முல்லை செடிக்கு கொடுத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் எதிர் பார்க்காத அளவிற்கு முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement