காய்க்காத கொய்யா மரத்தில் கூட 3 மாதத்தில் காய்கள் காய்க்க இதை மட்டும் பண்ணுங்க..

Advertisement

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க 

பழங்கள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதனை நாம் கடையில் வாங்கும் போது அதில் கெமிக்கல் கலந்து தான் பழுக்க வைத்திருப்பார்கள். அந்த பழங்களை நாம் வீட்டில் சாகுபடி செய்தால் ஆரோக்கியமான பழங்கள் கிடைக்கும். அந்த வகையில் கொய்யா பழம் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கிறது. பக்கத்து வீட்டில் கொய்யா மரம் இருக்கிறது என்று தன்னுடைய வீட்டிலும் வளர்க்க வேண்டும் ஆசை வருகிறது. அதனால் கொய்யா செடிகளை வாங்கி வந்து வளர்ப்பார்கள். ஆனால் இதிலிருந்து எந்த விதமான வளர்ச்சியும் இருக்காது. அதனால் தான் இந்த பதிவில் காய்க்காத கொய்யா மரத்திலிருந்து கூட கொய்யா காய்களை அதிகமாக காய்க்க வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க:

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க

கொய்யா மரத்தின் மண் கலவை:

கொய்யா செடியை வைப்பதற்கு மண் கலவையாக செம்மண்ணை எடுத்து கொள்ளவும். அதில் தொழு உரம், மணல், சாம்பல், வேப்ப புண்ணாக்கை சேர்த்து கலந்து கொள்ளவும். ஏன் இந்த பொருட்கள் எல்லாம் மிக்ஸ் செய்கிறோம் என்றால் கொய்யா செடிக்கு ph அளவானது 5.2 முதல் 7.2 வரைக்கும் இருக்க வேண்டும். சாம்பல் மற்றும் வேப்ப புண்ணாக்கானது ph அளவை அதிகமாக வைப்பதற்கு உதவுகிறது.

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும் 

தண்ணீர்:

கொய்யா செடிக்கு தண்ணீரானது இரண்டு வேலையும் ஊற்ற வேண்டும். மண்ணானது எப்பொழுதும் ஈரப்பதமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

உரம்:

அரிசி கழுவிய தண்ணீர், காய்கறி கழிவுகள் போன்றவை தினமும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தேமோர் கரைசல் வாரத்தில் ஒரு நாள் கொடுக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்க:

பூச்சி தாக்குதல் இருந்தால் காய்கள் காய்க்காது. அதனால் ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் சிறிதளவு, பேபி ஷாம்பூ சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொய்யா மரத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பாருங்கள், கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்கும்.

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement