வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

Updated On: February 12, 2025 6:51 PM
Follow Us:
how to plant hibiscus from seeds in tamil
---Advertisement---
Advertisement

How to Plant Hibiscus from Seeds

பலருக்கும் வீட்டில் செடிகள் வளர்ப்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் பூச்செடிகளை தான் அதிகம் வளர்ப்பார்கள். சில பேர் எந்த செடியை வைத்தாலும் உடனே வளர ஆரம்பித்து விடும். ஆனால் சில பேர் வாங்கி வந்த செடியை பார்த்து பார்த்து பராமரிப்பார்கள். அவை வளர்ச்சி அடைந்திருக்காது. வாசல் புறம் அல்லது பின்புறம் செம்பருத்தி செடிகளை வளர்ப்பார்கள். உங்களுக்கு செம்பருத்தி செடி வளர் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதனை எப்படி வளர்ப்பது எப்படி என்று தெரியவில்லையா.! அப்போ இந்த பதிவிற் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இந்த பதிவில் விதையிலிருந்து செபருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தொட்டி:

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

விதையிலிருந்து செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

முதலில் செம்பருத்தி விதைகளை தண்ணீரில் சேர்த்து  8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரைக்கும் அறை வெப்பநிலையில் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து விதையை பதியம் செய்வதற்கு தொட்டி அல்லது பானையை எடுத்து கொள்ள வேண்டும். இதில் செம்மண் அல்லது உங்கள் வீட்டில் இருக்கின்ற மண்ணை அந்த தொட்டியில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு இதில் தேங்காய் நார் மற்றும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். அதன் பிறகு  இந்த தொட்டியில் கால் அங்குல ஆழத்தில் விதைகளை நட்டு மேலே மண்ணை போட்டு மூடி விட வேண்டும்.

செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சியை முற்றிலும் ஒழிக்க மைதா மாவு ஒன்று போதும்..!

சூரிய ஒளி:

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

இதில் தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் 6 நாட்கள் முதல் 8 நாட்கள் வரைக்கும் அப்படியே வைக்க வேண்டும். 8 நாட்கள் கழித்து பார்த்தால் செடி முளைத்து வந்திருக்கும். இவை அப்படியே 45 நாட்களுக்கு இருக்கட்டும். தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றி வாருங்கள்.

நீங்கள் 45 நாட்கள் கழித்து வேறொரு பெரிய தொட்டிக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றி கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம், காய்கறி கழிவுகள் போன்றவற்றை சேர்த்து மண்ணை கிளறி விட வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். முக்கியமாக சூரிய ஒளிப்படும் இடத்தில் இருக்க வேண்டும்.

அதன் பிறகு 6 மாதம் கழித்து பார்த்தால் செடி நன்றாக வளர்ந்திருக்கும். விதையிலிருந்து செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். வேறொரு பதிவில் சந்திக்கின்றேன் நன்றி.!

தோட்டத்தில் பூச்செடிகளை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now