ரோஜா செடி துளிர் விட
ரோஜா பூவை பிடிக்காத நபர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு நாம் அனைவருக்கும் பிடித்த ரோஜா பூவில் எண்ணற்ற நிறங்கள் இருக்கிறது. அத்தகைய நிறங்கள் அனைத்தும் நமக்கு பெரும்பாலும் பிடிக்கும் வகைகளில் மட்டும் தான் காணப்படுகிறது. இப்படிப்பட்ட ரோஜாவை பூக்கடைகளில் வாங்குவதற்கு பதிலாக அனைவரும் வீட்டிலேயே செடியாக வாங்கி வளர்த்து வருகிறார்கள். ஆனால் நாம் வாங்கி வந்த போது நன்றாக இருக்கும் ரோஜா செடி நாளடைவில் வாடியும், துளிர் விடாமலும் போய்விடுகிறது. இவ்வாறு ரோஜா செடி துளிர் விடமால் இருந்தால் பூக்கள் என்பதே அதிகமாக பூக்காது. அதனால் இன்று ஒரே வாரத்தில் காய்ந்து போன ரோஜா செடி துளிர் விட என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
How to Plant Rose Sprout:
டிப்ஸ்- 1
புதிதாக வாங்கிய ரோஜா செடி துளிர் விடாமல் இருப்பது என்பது பொதுவான ஒன்று. இதுபோன்று இருக்கும் ரோஜா செடியினை நன்றாக துளிர் விட வைப்பதற்கு ஆட்டுச்சாணம் சிறந்த ஒன்று.
அதனால் 2 கைப்பிடி அளவு ஆட்டுச்சாணத்தை ஒவ்வொரு ரோஜா செடிகளுக்கும் உரமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு உரம் கொடுத்த பிறகு அதனை நன்றாக செடிகளுக்கு போய் சேருமாறு கிளறி விட விட்டு பின்பு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இத்தகைய ஆட்டுச்சாணம் உரத்தினை 3 வாரத்திற்கு ஒரு முறை கொடுப்பதன் மூலம் ரோஜா செடி வேகமாக துளிர் விட ஆரம்பித்து விடும். ரோஜா செடி நன்றாக துளிர் விட்டாலே போதும் பூக்கள் நிறைய பூக்கும்.
செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..
டிப்ஸ்- 2
- வாழைப்பழத்தோல்
- ஆரஞ்சு பழத்தோல்
- கடலை புண்ணாக்கு
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக வெயிலில் காய வைத்து விடுங்கள். பின்பு நன்றாக காய்ந்த பழத்தோல்களுடன், கடலை புண்ணாக்கு சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து விடுங்கள்.
இவ்வாறு அரைத்து வைத்துள்ள உரத்தினை ஒவ்வொரு ரோஜா செடிகளுக்கும் 1 ஸ்பூன் என்ற கணக்கில் உரமாக கொடுங்கள். பின்பு இதனுடன் தினமும் தினமும் தண்ணீரும் ஊற்றி கொண்டே வாருங்கள்.
இத்தகைய முறையினை செய்வதன் மூலம் ரோஜா செடிகளுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் கிடைத்து செடி துளிர் விட்டு மொட்டுகள் வைக்க ஆரம்பித்து விடும்.
முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |