கொய்யா மரத்தில் பிஞ்சுகள் உதிர்வை தடுக்க
கொய்யாப்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பழ வகைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக தான் கொய்யாப்பழம் இருக்கிறது. அந்த வகையில் கடைகளில் விற்கும் கொய்யாப்பழத்தினை விட வீடுகளில் காய்க்கும் கொய்யா பழத்திற்கு சுவை மிகவும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பெரும்பாலான வீடுகளில் பச்சை கொய்யா மற்றும் பிங்க் கொய்யா என இவற்றை எல்லாம் வளர்க்க ஆர்மபித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலரது வீட்டில் கொய்யாப்பழம் நன்றாக காய்கிறது. அதேசமயம் மற்ற வீடுகளில் அந்த அளவிற்கு கொய்யப்பழம் அதிகப்படியான காய்க்காமல் பிஞ்சுகள் அனைத்தும் கீழே கொட்டிவிடுகிறது. அதனால் இன்று கொய்யா மரத்தில் உள்ள பிஞ்சுகள் கீழே கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
கொய்யா பிஞ்சு உதிராமல் இருக்க:
கொய்யா மரம் வளர ஆரம்பிக்கும் போது நீங்கள் அதற்கு சரியான அளவில் தண்ணீர் மற்றும் உரத்தினை அளிக்க வேண்டும். அதே சமயம் கொய்யா மரத்தினை நீங்கள் செம்மண் மற்றும் கரிசல் மண்களில் நடுவதன் மூலம் மரம் வேகமாக வளர ஆரம்பித்து விடும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறையினை செய்வதன் மூலம் மரம் அடிப்படையாக நன்றாக வளர ஆர்மபித்து விடும்.
டிப்ஸ்: 1
- மாட்டுச்சாணம்- 2 கைப்பிடி
- முருங்கை கீரை- 1 கைப்பிடி
- வாழைப்பழத்தோல்- 1 கைப்பிடி
- பீர்க்கங்காய் தோல்- 1 கைப்பிடி
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்றினையும் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு வாலியில் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அந்த தண்ணீரில் எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து நன்றாக 1 நாட்கள் வரை மூடி வைத்து விட வேண்டும். 1 நாட்கள் கழித்த பிறகு இதை கொய்யா மரத்தில் ஊற்ற வேண்டும்.
இத்தகைய தண்ணீரை ஊற்றுவதன் மூலம் கொய்யா மரத்திற்கு தேவையான நார்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து கிடைத்து. கொய்யா மரத்தில் பிஞ்சு உதிர்வு குறைந்து காய்கள் பெருக்க ஆரம்பித்து விடும்.
பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
டிப்ஸ்: 2
உங்களுடைய கொய்யா மரத்தில் பிஞ்சுகள் உதிர்வு நின்ற பிறகு மரத்தில் இருக்கும் சிறு சிறு கிளைகளை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பித்து விடும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |