செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..

Advertisement

செம்பருத்தி செடியில் மொட்டு அதிகமாக வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

வீட்டில் பலருக்கும் பூச்செடிகள் வளர்க்க ஆசையாக இருக்கும். பல நபர்கள் அவர்களின் ஆசை போலவே பூச்செடியை வளர்கின்றனர். பெரும்பாலானவர்களின் வீட்டில் வாசல் பகுதியில் ரோஜா செடி அல்லது செம்பருத்தி செடி இருக்கிறது. சில நபர்கள் வீட்டின் பின்புறத்திலும் செம்பருத்தி செடியை வளர்ப்பார்கள். இந்த செம்பருத்தி செடியானது காலையில் பூக்கள் பூத்து வீட்டையே அழகாக இருக்கும். சிலரது வீட்டில் செம்பருத்தி செடி வீட்டில் வைத்தவுடன் பூக்கள் பூத்து குலுங்கும். ஆனால் சில நபர்கள் வீட்டில் செடிகள் வைத்த கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். நாள் ஆக ஆக பூச்சி தாக்கி மொட்டுகள் உதிர்ந்து விடும். அதனால் இந்த பதிவில் செம்பருத்தி செடியில் உள்ள மொட்டுகள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

மொட்டுகள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்: 

மொட்டுகள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

தண்ணீர் ஊற்றும் முறை:

நீங்கள் வைக்கும் செம்பருத்தி செடியில் தண்ணீரானது காலை 10 மணிக்குள் அல்லது மாலை 4 மணிக்கு மேல் ஊற்ற வேண்டும். வெயில் நேரத்தில் தண்ணீரை ஊற்றினால் மொட்டுகள் உதிர ஆரம்பிக்கும். அதனால் வெயில் இல்லாத நேரத்தில் தண்ணீரை ஊற்றி செடியை குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும்.

செம்பருத்தி பூ சாகுபடி செய்யும் முறை.!

உரம்:

அடுத்து செம்பருத்தி செடியில் உள்ள மண்ணானது தண்ணீர் ஊற்ற ஊற்ற அப்படியே இறுகி விடும். அதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை மண்ணை கிளறி விட்டு உரத்தை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படி செய்வதினால் செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகமாக பூக்கும்.

முக்கியமாக செம்பருத்தி செடியை வெயில் உள்ள இடத்தில் தான் வைத்து தான் வளர்க்க வேண்டும். அப்போது செடி செழிப்பாக வளரும்.

மொட்டு உதிராமல் இருக்க:

ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு வேப்ப எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை செடிக்கு ஊற்ற வேண்டும். இப்படி செய்வதனால் செடிகளில் பூச்சி வராமல் பாதுகாத்து கொள்ளும். பூச்சி தொல்லை இல்லாவிட்டால் மொட்டுகளும் உதிராது.

மேல் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி பாருங்க செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் உதிராமல் பூக்கள் அதிகமாக பூக்கும்.

எளிய முறையில் சாமை பயிரிடுதல் பற்றி தெரியுமா..?

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement