செம்பருத்தி செடியில் பூச்சி
பொதுவாக நாம் எல்லோருடைய வீட்டிலும் நமக்கு பிடித்தாமான பூச்செடிகளை வாங்கி வளர்த்து வருவோம். அதிலும் குறிப்பாக செம்பருத்தி செடி இல்லாத வீட்டினை பார்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் செம்பருத்தி செடியில் உள்ள பூக்கள் மற்றும் இலையினை போல நமது முடிக்கு நன்மை தரக்கூடிய பூக்கள் வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு நாம் ஆசை ஆசையாக வளர்த்து வரும் செம்பருத்தி பூ செடியில் எறும்புகள் என்பது எப்போது பார்த்தாலும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் இன்று செம்பருத்தி செடி மற்றும் பூக்களில் எறும்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம். எனவே பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ஒரே வாரத்தில் ரோஜா செடி துளிர் அடித்து மொட்டுக்கள் வைக்க இதை மட்டும் தினமும் ஊற்றுங்கள் போதும்
செடிகளில் எறும்பு தொல்லை:
செடிகளில் எறும்பு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் அதற்க்கு ஒரு கரைசலை தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்து வைத்து விடுங்கள்.
- பட்டை- 6
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- தண்ணீர்- 1 லிட்டர்
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனுடன் 6 பட்டை துண்டினையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். கடாயில் உள்ள 1 லிட்டர் தண்ணீர் 3/4 லிட்டர் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
அதன் பிறகு கொதித்த தண்ணீரை நன்றாக ஆற விடுங்கள். அடுத்து ஆறிய தண்ணீருடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது கரைசல் தயார்.
செடிகளுக்கு கரைசல் அளிக்கும் முறை:
தயார் செய்து வைத்துள்ள பட்டை மஞ்சள் தண்ணீரை செடியின் மீது, மண்ணில் படுமாறு தெளித்து விடுங்கள் அல்லது ஸ்ப்ரே செய்து விடுங்கள்.
மேலும் இந்த கரைசலை மூன்று நாட்கள் தொடர்ந்து தெளிக்க வேண்டும்.
பயன்கள்:
இத்தகைய கரைசல் பூச்சிகளை விரட்டுவது மட்டும் இல்லாமல் செம்பருத்தி செடியின் வேர்களுக்கு ஊக்கமளித்து பூக்கள் அதிகமாக பூக்க வைக்கவும் உதவுகிறது. அதேபோல் மொட்டுகள் உதிர்வையும் தடுக்கிறது.
முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |