How to Prevent Mango Flowers From Falling
மாம்பழம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாக உள்ளது. இத்தகைய மாம்பழத்தில் நிறைய வகைகள் உள்ளது. ஆனால் பெரும்பாலும் நாம் ஒட்டு மற்றும் உருண்டை வடிவிலான மாங்காயினை மட்டும் தான் அதிகமாக சாப்பிடுகின்றோம். அதேபோல் மாம்பழத்தின் சுவை என்பது ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட முறையில் தான் காணப்படும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நிறைய நபர்கள் வீட்டிலேயே மாங்காய் மரத்தினை வளர்த்து வருகிறார்கள். இத்தகைய முறையில் என்ன தான் நாம் பராமரித்து வளர்த்து வந்தாலும் கூட சில நேரத்தில் பூக்களின் உதிர்வும், மா பிஞ்சுகளின் உதிர்வும் அதிகமாக இருக்கிறது. எனவே இன்றைய பதிவில் இந்த இரண்டையும் எவ்வாறு தடுப்பது என்று தான் பார்க்கப்போகிறோம்.
மாமரத்தில் பூக்கள் உதிர்வை தடுப்பது எப்படி..?
மாமரத்தை பொறுத்தவரை நன்றாக சத்துள்ளதாக இருந்தால் மட்டுமே அதில் நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்க ஆரம்பம் ஆகும். அதே சமயம் பூக்களின் உதிர்வு என்பது ஒரு சில மரத்தில் அதிகமாக காணப்படும்.
இவ்வாறு பூக்களின் உதிர்வை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு மணிசத்து, நார்ச்சத்து மற்றும் சாம்பல்சத்து ஆகிய சத்துக்கள் அவசியமான ஒன்றாக உள்ளது.
அதனால் மாமரத்திற்கு உங்களுடைய வீடுகளில் இருக்கும் சாம்பல், மக்கும் தழைகள், மண்புழு உரம் மற்றும் முட்டை ஓடு ஆகியவற்றையினை உரமாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு உரமாக அளிப்பதன் மூலம் மாமரத்தில் பூக்கள் உதிர்வை தடுக்கலாம்.
முருங்கை மரத்தில் பூச்சிகளை விரட்டி பூக்கள் உதிராமல் இருக்க மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க |
மா பிஞ்சுகள் உதிராமல் இருக்க:
- தேங்காய் பால்
- புளித்த மோர்
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டினையும் முதலில் உங்களின் மரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு இந்த இரண்டையும் நன்றாக கலந்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் 5 நாட்கள் வரை மூடி வைத்து விடுங்கள்.
கடைசியாக 5 நாட்கள் கழித்து தயார் செய்து வைத்துள்ள தேமோர் கரைசலுடன் தண்ணீர் கலந்து மரத்தில் தெளிப்பதன் மூலம் மா பிஞ்சுகள் கொட்டுவதை தவிர்க்க முடியும்.
காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |