பூவும், பிஞ்சுமாக இருக்கும் கத்தரிக்காய் செடியில் வரும் பூச்சிகளை விரட்ட இதை செய்யுங்க..!

Advertisement

How to Grow Brinjal at Home 

அன்றாட சமையலுக்கு முக்கியமாக கத்திரிக்காய் தேவைப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குழம்பிற்கு ஏற்றவாறும் காய்கறிகள் தேவைப்படும். இவ்வாறு நமக்கு தேவைப்படும் காய்கறிகளை கடைகளில் தான் வாங்கி வருகிறோம். ஆனால் இவ்வாறு கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே வளர்த்து அதனை சரியான முறையில் இயற்கை உரங்களை அளித்து வருவதன் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியமான காய்கறிகள் கிடைத்து விடும். இவ்வாறு இருக்கையில் கத்தரிக்காய் ஆனது அனைத்து விதமான குழம்பிற்கும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. அதனால் வீட்டில் வளர்த்து வரும் கத்தரிக்காய் செடி பூவும், பிஞ்சுமாக வைத்து எவ்வாறு செழித்து வரும் செடியில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். ஆகவே கத்தரிக்காய் செடியில் பூச்சிகளை விரட்டுவது எப்படி என்பதற்கான டிப்ஸினை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

கத்தரி செடி வளர்ப்பு முறை:

கத்தரிக்காய் செடிகளை நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு சரியான முறையில் தண்ணீர் விட்டு பராமரித்து வர வேண்டும். மேலும் அதில் காய்ந்த இலைகள் அல்லது பூச்சி எதுவும் இலையில் இருந்தாலும் அதனை நீக்கி விடுவது நல்லது.

கத்தரி செடி பூச்சி:

  • எருக்கன் இலை
  • கற்றாழை
  • பிரண்டை
  • பப்பாளி இலை
  • கோமயம்
  • வேப்பிலை

 கத்தரி செடி பூச்சி

மேல் சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் 75 கிராம் அளவிலும், 1 லிட்டர் கோமியமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்துவைத்துள்ள இலைகளை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் பாத்திரத்தில் இலைகளை சேர்த்து அதனுடன் 1 லிட்டர் கோமியத்தை அதில் சேர்த்து கலந்து 7 நாட்கள் வரை மூடி வைத்து விடுங்கள்.

7 நாட்கள் கழித்து இந்த கரைசலை மீண்டும் ஒரு முறை குலுக்கி கொள்ளுங்கள். அடுத்த இந்த கரைசலை வடிகட்டி கொண்டு அதில் இருக்கும் இலைகளை செடிகளுக்கு கீழே இருக்கும் மண்ணிற்கு அடியில் போட்டு விடுங்கள்.

கடைசியாக வடிகட்டிய கரைசலை கத்தரிக்காய் செடிகளின் மீது தெளித்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வதன் மூலம் கத்தரிக்காய் செடிகளில் இருக்கும் பூச்சிகளின் தொல்லை இருக்காது. 

மேலும் இந்த இலைகளை செடிகளுக்கு அடியில் போடுவதன் மூலம் செடிகளுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement