How To Protect Plants From Heat in Tamil
வெயில் காலம் ஆனது செடிகள் முதல் மனிதர்கள் என அனைவரையும் வாட்டி விடுகிறது. அதுவும் மாடியிலிருக்கும் செடிகள் வெயிலின் அதிக தாக்கத்தால் வாடி விடுகின்றன. என்னதான் நாம் கோடைகாலத்தில் செடிகளை இரு வேளையும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக வைத்தாலும் கூட அது வாடி விடுகிறது. பிறகு, மீண்டும் நாம் புதிதாக மாடித்தோட்டம் அமைக்கும் சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..!
How To Protect Plants in Summer in Tamil:
செடிக்கு அடியில் இலைகளை வைத்தல்:
மாடித்தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடிக்கும் காய்ந்த நிலையில் உள்ள வேப்ப இலைகளை வைத்தல். அதாவது செடியின் வேரினை சுற்றி வேப்ப இலைகளை நிரப்பி விடுதல்.
இதனால், செடிக்கு அடியில் இருக்கும் ஈரப்பதம் விரைவில் வற்றிபோகாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த காய்ந்த இலைகள் மக்கி செடிக்கு உரமாகவும் மாறிவிடுகிறது.
எனவே, உங்கள் வீட்டு பகுதியின் அருகில் உள்ள வேப்ப மரங்களில் இருந்து கீழே விழும் வேப்ப இலைகளை சேகரித்து அனைத்து செடிகளிலும் பரப்பி விடுங்கள்.
தண்ணீர் ஊற்றுதல்:
பொதுவாக, சாதாரண நாட்களில் செடிக்கு 1 நாள் விட்டு 1 நாள் தண்ணீர் ஊற்றினால் போதும். ஆனால், வெயில் காலத்தில் செடிக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தண்ணீர் ஊற்றுதல் வேண்டும்.
புளித்த மோர் கரைசல் ஊற்றுதல்:
முதலில் தேவையான அளவில் புளித்த மோரினை எடுத்து கொள்ளவேண்டும். பிறகு, இதில் செடிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தண்ணீரை சேர்த்து கொள்ளவேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து செடிகளில் தெளித்து விட வேண்டும்.
இந்த புளித்த மோர் கரைசலை செடியின் வேர்பகுதிகளிலும், இலைகளிலும் தெளித்து விட வேண்டும். இதனை நீங்கள் மாலை வேளைகளில் செடிக்கு தெளித்து வரலாம்.
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..
நிழல் வலைக்குடில் அமைத்தல்:
வெயில் காலத்தில் அதிகமாக வெப்பம் நேரடியாக செடிகளுக்கு கிடைக்கிறது. எனவே அளவுக்கு அதிகமான வெப்பம் செடியில் படுவதால் செடி பாதிப்படையும். ஆகையால் வெயில் காலத்தில் மாடித்தோட்டத்திற்கு நிழல் வலைக்குடில் அமைப்பது மிகவும் அவசியம்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |